உடல் நலம்

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்

பன்றி காய்ச்சல் எச்1 என்1 என்ற வைரஸ் கிருமியால் பரவுகிறது. இக்கிருமி 5 வயதுக்குற்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் எளிதில் பரவும். இதற்கு தகுந்த சிகிச்சை இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். இதற்கான அறிகுறிகள் வந்தவுடன் உடனே மருத்துவமனை செல்லவேண்டும்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்

  • சளி பிடிக்கும்
  • உடனே காய்ச்சல் வரும்
  • தொண்டை வலி
  • உடல் சோர்வு
  • பசியின்மை
  • உடல் வலி

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

  • தினமும் சுத்தமான நீரில் குளிக்க வேண்டும்.
  • கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
  • 8 மணி நேர தூக்கம் அவசியம், உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிக முக்கியம்
    தினமும் 2 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும்.
  • வெளியில் சென்று வந்தால் குளித்து விடவேண்டும்.
  • சத்தான உணவு வகைகளை சாப்பிடவேண்டும். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அதிகளவு சாப்பிடவேண்டும்.
  • சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளவது சிறந்தது.
  • மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் 30 நிமிடம் வேகமான நடை பயிற்சி அவசியம். மிதமான உடற் பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • தும்மல், இருமல் மூலம் பரவும் என்பதால் நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!