மூலிகைகள்
இரத்தசோகையைப் போக்கும் பசலைக்கீரை
பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகளவில் உள்ளது.
நீர்க்கடுப்பு நீரடைப்பு நீங்காத மேகமுமிவ்
வூர்க்கடுத்து வாராம லோடுங்காண் – பார்க்கவொண்
வற்பவிடை மாதே யரோசிசர்த்தி யுந்தொலையு
நற்பசலைக் கீரையத னால்
குணம்
நல்ல பசலைக் கீரையால் நீர்க்கடுப்பு, நீரடைப்பு, ஒழுக்குவெள்ளை, அருசி(சுவையின்மை), வாந்தி ஆகிய இவைகள் போம் என்க .
உபயோகிக்கும் முறை
இந்தக்கீரையுடன் பருப்பு சேர்த்து பாகப்படி கடைந்து அன்னத்தில் சேர்த்து நெய் விட்டு சாப்பிட அதிக ருசியாக இருக்கும்.
பயன்கள்
இது நல்ல இரத்தத்தை யுண்டாக்கும், தேகத்திலுள்ள வெப்பத்தை தணிக்கும். தேகத்திற்குப் பலத்தை கொடுக்கும். நீர்ச் சுருக்கு, நீர்க்கட்டு இவைகளை நீக்கும். மலத்தை இளகாக்கும்.