நோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்
இரத்த கொதிப்பு
சுமார் நூற்றில் 50 பேருக்கு 50 வயதுக்கு பிறகு இந்த நோய் உண்டாகிறது. உடம்பில் இருக்கும் நுண்ணிய நாடிக்குழாய்களின் துவாரம் சுருங்கி விடுதலே இதற்குரிய காரணம். சக்திக்கு மிஞ்சி உழைப்பது அதிக உணவு கொள்ளுதல், அதிகமாக டீ, காப்பி, புகையிலை முதலியவற்றை அதிகமாக உபயோகித்தால் இரத்த கொதிப்பு நோய் ஏற்படுகிறது.
இரத்தப் பித்தம்
பித்த நீர் அதிகரித்து உடலில் சேர்ந்து நாளடைவில் இரத்தத்தை விஷமாக்கி விடுகிறது. பசியின்மை, கிறுகிறுப்பு, தலைவலி, புத்திபேதலித்தல், பார்வை கோளாறு, உடல் மஞ்சளாகுதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.
இருதய வியாதி
இருதய பலவீனத்தால் உண்டாவதே இருதய நோய். இரத்த ஓட்டம் அதிகமாக ஓட ஆரம்பிக்கும் போதும். இரத்த ஓட்டம் தடைபடுத்தப்பட்ட போதும் இருதய நோய் ஏற்படுகிறது.
ஈறு வலி
அசீரத்தினாலும் பற்களை சுத்தமாக வைத்து கொள்ளாததனாலும் பல் ஈறுகளில் வீக்கம் கண்டு சீழ்பிடித்து புண்ணாகும். பல் ஈறுகளிலும் இரதம் கசிவதுண்டு.
கண் வலி
தொற்று நோய்கிருமிகளால் கண் நோய் வரும். அதிக குளிரினாலும் கண் நோய் வரும். கண்ணிமைகள் வீங்கி சிவந்திருக்கும். கண்ணீர் வடிந்துகொண்டே இருக்கும். கண் கூச்சமும் உறுத்தலும் இருக்கும்.
அக்னி மந்தம்
சாப்பிட்ட உணவு சீரணமாகாமல் அவதிப்படுத்துவதே அக்னி மந்தம். வயிற்றுக்கோளாறுகள் உப்புசம் அடிக்கடி கொட்டாவி வருதல் முதலியன இதற்குரிய அறிகுறிகள்.
அசீரணம்
உணவை நன்றாக மென்று சாப்பிடாததாலும் போதிய தண்ணீர் குடிக்காததாலும் அசீரணம் ஏற்படும். வயிற்று உப்புசம், வயிற்று வலி, வாந்தி வருவது போன்ற உணர்சி முதலியன உண்டாகும்.
சுவையின்மை
எந்த உணவையும் சாப்பிட விருப்பம் இருக்காது, ருசியே தெரியாது. இதுவும் அசீரத்தினால் ஏற்படுவதே. நீண்ட காலம் பேதிக்கு சாப்பிடாதவர்கள் சுவையின்மையால் அவதிப்படுவார்கள்.
ஆசன நோய்
மலக்குடலில் கீரைப்பூச்சி அதிகரித்து ஆசனவாயில் அரிப்பை உண்டுபண்ணும் எப்போதும் சொரிந்து கொண்டுருப்பதினாலும் ஆசன வெடிப்பு உண்டாகிறது. இந்த நோயினால் சில சமையம் இரத்தம் கசிவதுண்டு.
இடுப்பு வலி
அதிகமாக எழுந்து வேலைகள் செய்யாமல் உகந்த இடத்திலேயே அதிக நேரம் வேலை செய்தல், தீவிர மலசிக்கலினால் உஷ்ணம் அதிகமாகி இருத்தல் முதலியவற்றால் இடுப்பு வலி ஏற்படுகிறது.