மூலிகைகள்

கல்லடைப்பு குணமாக்கும் நெருஞ்சில்

நெருஞ்சில் மருத்துவ பயன்கள்

தரையோடு படர்ந்த சிறுகொடிகள். மஞ்சள் நிற மலர்களையுடையது.மலர்கள் சூரியத் திசையோடு திரும்பும் தன்மையுடையன.முள்ளுள்ளக் காய்களையுடையது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும் தரிசுகளிலும் வளர்கிறது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது.

சிறுநீர், தாதுபலம், காமம் ஆகியவற்றை பெருக்கவும் தாது அழுகல் குருதிக் கசிவு ஆகியவற்றை நிறுத்தவும் மருந்தகப் பயன்படும்.

பொதுவான குணங்கள்:

சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி, உடலுக்கு வலிமையை தரும், குளிர்ச்சியை உண்டாக்கும்

நெருஞ்சில் மருத்துவ பயன்கள்

நெருஞ்சில் செடி 2, அருகு 1 கைப்பிடி, 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக்கி 50 மி லி அளவாகக் காலை மதியம், மாலை 2, 3 நாள்கள் கொடுக்கக் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், நீர்ச்சுருக்கு ஆகியவைத்த தீரும்.

சமூலச்சாறு 1 அவுன்ஸ் மோர் அல்லது பாலுடன் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.

நெருஞ்சில் சமூலத்துடன் (மூலிகையின் விதை, பூ, செடி) கீழாநெல்லி சமூலம் சம அளவு சேர்த்து மைபோல அரைத்து கழற்சிக்காய் அளவு தயிரில் கலந்து காலை மாலை 1 வாரம் கொடுக்க நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, மேகக்கிரந்தி போன்ற தீரும்.

நெருஞ்சில் வித்தினை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும், இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர்கட்டு சதையடைப்பு கல்லடைப்பு தீரும்.

Leave a Comment

2 × three =

error: Content is protected !!