நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை

நிலவேம்பு அதிக கசப்பு தன்மையுடைய மூலிகையாகும். நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவிலமைந்த தண்டுகளையும் உடைய சிறு செடி. தமிழ்நாட்டில் அனைத்து சம வெளிப்பகுதிகளில் வளர்கிறது. நிலவேம்பு செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. காய்ச்சலை குணப்படுத்துவது இதன் முக்கிய குணமாகும். பசி உண்டாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தி ஆகிய பண்புகளை உடையது.

தேவையான மூலிகைகள்

 • நிலவேம்பு
 • வெட்டிவேர்
 • விலாமிச்சம் வேர்
 • பற்படாகம்
 • பேய்புடல்
 • கோரைக் கிழங்கு
 • சந்தனச்சிறாய்
 • சுக்கு
 • மிளகு

செய்முறை

இந்த 9 மூலிகைகளையும் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து இதமான சூட்டில் பருகவேண்டும். இதை நான்கு மணிநேரத்திற்குள் பருகவேண்டும். 10 வயதுக்கு குறைவானவர்கள் சித்தமருத்துவர் ஆலோசனை படி அளவு தெரிந்து பருகவேண்டும்.

பயன்கள்

 • நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.
 • பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் வகைக்கு 10 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி தினம் 6 வேளை 50 மி லி கொடுக்க நச்சுக்காய்ச்சல் குணமாகும், காய்ச்சல் வராமலும் தடுக்கும்.
 • சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =