ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ் செடி. எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மையுடையதாகையால் இப் பெயர் பெறுகிறது. இதன் பூ, வேர் ஆகியவை மருத்துவப்பயனுடையது. இதனை சுடுகாட்டுப்பூ என்று கிராமப்புறங்களில் அழைக்கப்படுகிறது.

குணம்

மனரீதியான நோய்கள், இரத்த அழுத்தத்தை குறைக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். நித்தியகல்யாணி பூ அழகு சாதன பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. நாடி நடையை சமப்படுத்தவும் சிறுநீர்ச்சர்க்கரையை குறைக்கவும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

பசியின்மை, உடல் பலவீனம், அதிக தாகம்

5 நித்தியகல்யாணி பூக்களை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி ஒரு நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், சிறுநீர் அடிக்கடி போதல், உடல் பலவீனம், மிகு பசி, பசியின்மை தீரும்.

நீரிழிவு

நீரிழிவு நோய்க்கு சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்த படுகிறது. இதன் வேர் சூரணத்தை 1 சிட்டிகை வெந்நீரில் கலந்து ஒருநாளைக்கு 3 வேளை சாப்பிட்டு வர சிறுநீரசர்கரை குறையும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =