உடல் நலம்

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

குளியல் - எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நம் பாரம்பரிய குளியல் முறையே, இந்த குளியல் முறையில் பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது, ஏனென்றால் நல்லெண்ணையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

நம் உடலுக்கு எண்ணெய் சத்து என்பது மிகவும் அவசியமானது. முடி மற்றும் சருமத்திற்கு இயல்பாகவே எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது.

தலை முதல் பாதம் வரை நல்லெண்ணையைத் தேய்த்து , சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

எண்ணெய் தேய்த்த 15-30 நிமிடங்களுக்குள் குளிப்பது நல்லது. குளிக்கும் போது சீகக்காய் பயன்படுத்துவது சிறந்தது. ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

எள் பற்றி சிறப்பை சித்த மருத்துவ பாடலில் இப்படி செல்லியிருக்கிறார்கள்.

எள்ளுமருந் தைக்கெடுக்கு மேறனலாந் திண்மைதரு
முள்ளிலையைச் சேர்க்கு முதிரத்தைத் – தள்ளுமிரு
கண்ணுக்கொளிகொடுக்குங் காசமுண்டாம்பிததமுமாம்
பண்ணுக் கிடர்புரியும் பார்.

உள்ளும் புறமுமாக எண்ணெய்களின் சீரான உபயோகம் நம் உடலுக்கு தேவையான வழுவழுப்பை ஏற்படுத்தி உடல் உட்புற உறுப்புகளின் உரசல்களைத் தவிர்க்கப் பயன்படுகிறது.

வாரம் ஒரு முறை இவ்வாரு குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
  • அடர்த்தியான முடி வளரும்.
  • உடல் குளிர்ச்சிபெறும்.
  • பொலிவான சருமத்தை பெறலாம்.
  • கண்களுக்கு சிறந்து.
  • நல்ல உறக்கம்.

Leave a Comment

3 × four =

error: Content is protected !!