உடல் நலம்

நரம்பு தளர்ச்சி குணமாக இயற்கை வழிமுறைகள்

நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் கை நடுக்கம், ஒரு வித தடுமாற்றம், சோர்வு, அடிக்கடி களைப்பு, தூக்கமின்மை போன்றவை ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு காண முடியும்.

மருத்துவ பயன்கள்

  • பிரண்டை உப்பைச் சாதிக்காய்ச் சூரணத்துடன் நெய்யில் கலந்து சாப்பிட குணமாகும்.
  • விஷ்ணுகாந்தி, ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி சம அளவு எடுத்து அரைத்து பாக்களவு காலை, மதியம், இரவு உணவுக்கு முன்பாக உண்டு பால் குடித்து வர குணமாகும்.
  • வாதரசு இலைச்சாறு 1/4 லிட்டர், பூண்டு 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், வெண்கடுகு 5 கிராம் அரைத்துக் கலக்கிப் பதமாகக் காய்ச்சி வடித்து காலை மட்டும் 2 தேக்கரண்டி சாப்பிட குணமாகும்.
  • வெடிக்காத தென்னம் பளையிலுள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சம் காயளவுக் காய்ச்சிய பாலில் கலக்கிக் காலை, மாலை 40 நாள்கள் கொடுத்துவர குணமாகும்.
  • அதிமதுர பொடி 2 கிராம் தேனில் காலை மாலை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fourteen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!