தேங்காயில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.இந்திய மற்றும் ஆசிய நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. 232 டிகிரி வெப்பநிலையில் தான் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

தேங்காயி னைய்யதனற் ரீயால் வரும்புண்போம்
பாங்காகக் கூந்தல் படாந்தேறு – நீங்காத
பல்லடியின் னேயும் படர்தா மரைசிரங்கு
மல் லலறப் போமென் றறி.

மருத்துவ பயன்கள்

  • தேங்காய் எண்ணையை பயன்படுத்தி வந்தால் முடி நன்றாக செழித்து வளரும். தேங்காய் எண்ணையுடன் மருதாணி, செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, கரிசலாங்கண்ணி சேர்த்து காய்ச்சி பயன்படுத்தி வந்தால்
  • தலைமுடி நன்கு செழித்து வளரும், முடி கொட்டுவதும் நிற்கும்.
  • தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமடையும். தேங்காய் எண்ணெய் தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  • இளநரைக்கு தேங்காய் எண்ணையுடன் வெந்தயம், சீரகம், வால் மிளகு ஆகியற்றை பொடி செய்து கலந்து தேய்த்து வர இளநரை மறையும்.
  • கரிசலாங்கண்ணி சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வர இளநரை வருவதை தடுக்கும் தலைமுடி கருமைநிறமாகும்.
  • உடல் வலிக்கு குப்பை மேனி இலைச்சாறு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தேய்த்து வர குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =