மூலிகைகள்

இருதய வியாதிகள் அனைத்தையும் நீக்கும் அற்புத மூலிகை தாமரை

மருத்துவ பயன்கள்  - இருதய வியாதிகள் அனைத்தையும் நீக்கும் அற்புத மூலிகை தாமரை

மூளையைப் பலப்படுத்தினால் ஆயுள் பெருகும் என சித்தர்கள் கூறுகின்றனர். மனிதனுக்கு ஏற்படும் பலவித கவலைகளாலும் தாம்பத்திய வாழ்வில் அதிக ஈடுபாடுகளாலும் மூளை சில சமயங்களில் சீர்கெடும். அதனால் பாரிச வாயு, தலைசுற்றல், பித்தமயக்கம், சித்தப்பிரமை முதலிய நோய்கள் ஏற்படுகின்றன.

மூளையை பலப்படுத்துவது தாமரையே. தாமரையில் நான்கு வகைகள் உண்டு. நீரில் உற்பத்தியாவது 3 வகைகள், தரையில் உற்பத்தியாவது ஒன்று. வெண்தாமரை, செந்தாமரை, ஆகாயத்தாமரை ஆகியவை குளங்களில் உள்ள நீரில் மிதக்கும். சிவந்த பூ “செந்தாமரை” என்றும் வெண்ணிற பூ “வெண்தாமரை” என்றும் நீரில் அந்தரமாய் வேரோடு கொத்து கொத்தாக காணப்படுவதை ” ஆகாயத்தாமரை” என்றும் அழைக்கப்படுகிறது.

கல்தாமரை என்பது மலைகளின் இடுக்கில் உற்பத்தியாவது. இதன் இலைகள் வட்ட வடிவில் காணப்படும். இதில் பூ இருக்காது. கல்தாமரையில் தாமிர சத்து அதிகம். இரும்பு தூளை இதன் சாற்றில் ஊற வைத்து அடுத்தநாள் பார்த்தால் அந்த இரும்புத்தூள் முழுவதும் செம்பு நிறமாக இருக்கும். இது ஒரு மகத்தான மூலிகை. தாமரைப்பூ, தாமரை இலை, தாமரை தண்டு, தாமரை கிழங்கு ஆகியவை பயன்படுகின்றன.

பயன்கள்

  • ஒருகிராம் தாமரை விதையை ( விதைக்குள் ஒரு இலை போன்று இருக்கும் அதை நீக்கி விடவும் ) அரைத்து பாலில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர உடலில் உள்ள வெப்பம் தணிந்து தாது விருத்தி அடையும்.
  • 10 கிராம் அளவு செந்தாமரை பூவிதழ்களை 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராக காய்ச்சி வடித்து காலை, மாலை சாப்பிட்டு வர உடல் சூட்டை தணிக்கும்.
  • 1 கிலோ வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி 3 லிட்டர் நீரில் போட்டு ஓர் இரவு ஊறவைத்து அடுத்தநாள் ஒரு லிட்டராக காய்ச்சி வடிகட்டி ஒரு சர்க்கரை கலந்து தேன் போன்று பதமாக காய்ச்சி வைத்து கொண்டு 15 மிலி அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிட்டு வர உட்சூடு, தாகம் ஆகியவை அடங்கி கண் குளிர்ச்சி பெறும். இது இதயத்திற்கும் மூளைக்கும் மிகவும் நல்லது.
  • கல்தாமரை இலையை பொடி செய்து வைத்து கொண்டு தினம் காலை மாலை ஒரு சிட்டிகை நீருடன் கலந்து சாப்பிட மூளைக்கு பலம் ஏற்படும், ஆயுளும் பெருகும்.

300x200 - இருதய வியாதிகள் அனைத்தையும் நீக்கும் அற்புத மூலிகை தாமரை

இருதய வியாதிகள் நீங்க

இதயத்தில் உண்டாக்கும் வியாதிகளான அதிகத்துடிப்பு, குறைந்த துடிப்பு, இதய வீக்கம், இருதய சுருக்கம், ரணம், கபாடப்பந்தம் முதலியவைகளுக்கு ஒரு வெண் தாமரைப்பூவை கசாயமிட்டு சாப்பிட்டு வந்தால் உடனே குணம் காணலாம். 48 நாட்கள் தொடர்ந்து பருகிவர இருதய வியாதிகள் அனைத்தும் குணமாக்கிவிடும்.

Leave a Comment

seventeen + nine =

error: Content is protected !!