மூலிகைகள்

நீரிழிவு, ஆண்மை குறைவுக்கு சிறந்த மூலிகை தண்ணீர்விட்டான் கிழங்கு

விட்டான் கிழங்கு - நீரிழிவு, ஆண்மை குறைவுக்கு சிறந்த மூலிகை தண்ணீர்விட்டான் கிழங்கு

இதன் அடிப்பகுதியில் நீண்ட கொத்தாக காணப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு குளிர்ச்சி தன்மையும், இனிப்புசுவையும் கொண்டது. இது ஆண்மைக்குறைவு, நீரிழிவுக்கு சிறந்த மருந்தாகும்.

நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா
மூரைவிடுத் தோட வுறுக்குங்காண் – நாரியரே
வெண்ணீர்பெய் சோமநோய் வெட்டை யனற்றணிக்
தண்ணீர்விட் டான்கிழங்கு தான்

குணம்

தண்ணீர்விட்டான் கிழங்கு வெகுமூத்திரம், நீண்டநாள் சுரம்(காய்ச்சல்), சோமரோகம், வெள்ளை, உட்சூடு ஆகிய இவைகள் நீக்கும் என்க.

பயன்கள்

  • உலர்ந்த கிழங்கை இடித்து சூரணம் செய்து ஒருவேளைக்கு 5 கிராம் அளவு நெய், சர்க்கரை, பால் இவைகளில் இட்டு தினமும் 3 வேலை சாப்பிட நீர்க்கடுப்பு, எலும்புருக்கி, கைகால் எரிவு, தாதுபலவீனம், கரப்பான், நீண்டநாள் காய்ச்சல் முதலிய வியாதிகள் போம்.
  • பச்சைக்கிழங்கை இடித்து சாறு எடுத்து 1/2 அவுன்ஸ் வீதம் பாலில் கலந்து கொடுக்க தேக புஷ்டி உண்டாகும்.
  • இது நீரிழிவுக்கு சிறந்த மருந்தாகும். மேலும் வேகவெட்டை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களையும் நீக்கும்.
  • ஆண்மை குறைவை நீக்கி தாதுவை பலப்படுத்தும் உடலுக்கு நல்ல வலிமையை தரும்.

Leave a Comment

eleven + 16 =

error: Content is protected !!