ஞாபக சக்தி அதிகரிக்க சித்த மருத்துவ முறைகள்
ஞாபக சக்தி என்பது மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது. ஞாபகசக்தி இருந்தால் தான் நல்ல அறிவாற்றலை பெறமுடியும். மனிதனின் மூளை திறன் சிறப்பாகவும் நினைவாற்றல் அதிகரிக்கவும் சித்தமருத்துவத்தில் சிறந்த மருத்துவ முறைகள் உள்ளது.
ஞாபக சக்தி பெற சித்த மருத்துவ முறைகள்
வல்லாரை
வல்லாரை இலையை நன்றாக காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு நெய்யில் கலந்து காலை, மாலை சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.
அன்னாசி
சிறிதளவு அன்னாசி பழத்தை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ரோஜா
ரோஜா மொட்டு, நில வாகை, சுக்கு, கிராம்பு ஆகியவை நான்கையும் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பெரியவர்களுக்கு ஒரு அவுன்ஸ் – சிறுவர்களுக்கு அரை அவுன்ஸ் குழந்தைகளுக்கு கால் அவுன்ஸ் கொடுத்தால் நன்கு பேதியாகும். ஞாபக சக்தி உண்டாகும்.
அவரைக்காய்
அவரைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.
திரிபாலா சூரணம்
திரிபாலா சூரணம் தினமும் 5 கிராம் அளவு பாலில் அல்லது வெந்நீரில் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.
நாவல்பழம்
நாவல்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல நினைவாற்றல் அதிகரிக்கும்.
திப்பிலி
48 திப்பிலியை ஒருபாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை அதில் வல்லாரை இலைச்சாறு விட்டு உலர்த்த வேண்டும் இது போல் 9 நாட்கள் உலரவைத்து தினமும் ஒரு திப்பிலியை வாயிலிட்டு சுவைத்து உண்ணவேண்டும் இது போல் 48 நாட்கள் சாப்பிட்டு வர அபார ஞாபக சக்தி உண்டாகும்.