சித்த மருத்துவம்
என்றும் இளமையுடன் இருக்க சோற்றுக்கற்றாழையை சாப்பிடும் முறை
சோற்றுக்கற்றாழை நம் உடலை என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது. சோற்றுக்கற்றாழையை சாப்பிடும் முறையும் அதன் பயன்களும்
தேவையானவை
- சோற்றுக்கற்றாழை
- நாட்டு சர்க்கரை
செய்முறை
சோற்றுக்கற்றாழை ஒரு மடல் எடுத்து மேல்தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி பிறகு ஒரு மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி சோற்றுக்கற்றாழையை நன்றாக அலச வேண்டும். இது போல் 7 முறை நன்கு அலசி சுத்திப்படுத்திக்கொள்ளவும். பிறகு நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடவும்.
பயன்கள்
- இளமையை நீடிக்க செய்கிறது.
- உடல் சூட்டை தணித்து ஆண்மையை அதிகரிக்க செய்கிறது.
- கை, கால், கண், நீர் எரிச்சல் குணமாகும்.
- மூல நோய் குணமாகும்.
- மலச்சிக்கலை குணமாக்கும்.
- நெஞ்செரிச்சலை குணமாக்கும்.