நமது உடலின் கழிவு மண்டலத்தில் பெரும் பங்கு வகிப்பது சிறுநீரகக் கழிவு மண்டலமே சிறுநீரகக் கழிவு மண்டலம் ஒரு ஜோடி சிறுநீரகத்தையும், சிறுநீர்க் குழாயையும் மற்றும் சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்புற வழி ஆகிய பகுதிகளையும் கொண்டது.

அவரை விதை வடிவில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தும் சிறுநீரகம். வயிற்றுக்குப் பின் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக முதுகெலும்புக்கு இருபுறமும் அமைந்துள்ளது. இதன் நிறமோ கருஞ்சிவப்பு எடையோ வெறும் 300 கிராம்தான்.

கழிவு ஆலையாக இயங்கும் சிறுநீரகக் கழிவு மண்டலத்தையும் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சிலருக்கு கருவில் உருவாகும் போதே சிறுநீரகங்கள் சற்றுச் சிறியதாகவும் இடமாறி அமைவதும் சிறுநீர் குழாய்கள் குறுகலாக அமைவதும் பிறவிக்கோளராக அமைகிறது. இக்குழந்தைகள்  நீண்ட நாள் வாழ்வதில்லை என்பது ஆய்வு. சிறுநீரகக் கழிவு மண்டலக்கோளாறுகள் பிரதானமாக கிருமித்தொற்றாலே ஏற்படுகிறது எனலாம்.

இத்தகைய தொற்றுகள் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது எனலாம். காரணம் சிறுநீர்ப் புரவளியின் நீளம் ஆண்களை விடப் பெண்களுக்கு குறைவாக இருப்பதால் சுலபத்தில் கிருமித் தொற்றல் பாதிக்கப்படுகிறது.

எனவே மனித உடலில் மிக முக்கியம் வாய்ந்த சிறுநீரகம் செயல்பட சில மருத்துவ முறைகளைப்பற்றி காண்போம்.

நீர்முள்ளி சமூலம் 3 கைப்பிடியளவு, சிறு நெருஞ்சில் சமூலம் 2 கைப்பிடியளவு, சிறுகீரை வேர் எண்ணிக்கையில் 10, சுரைக்கொடி 50 கிராம், வெள்ளரி விதை 50 கிராம், திரிபலா சூரணம் 50 கிராம், இவைகளை ஒன்றாக இடித்து 2 லிட்டர் நீர் விட்டு காய்ச்சி 1/4 லிட்டராக வற்ற காய்ச்சி 1/4 லிட்டராக வற்ற வைத்து மூன்றாக பங்கிட்டு மூன்று வேலையும் சிறிது சர்க்கரை கலந்து குடிக்கவும். நீரிழிவு நேயாளிகளாக இருந்தால் சர்க்கரை கலக்காமல் குடிக்க வேண்டும். சிறுநீரக பிரச்சனை அனைத்தும் விலக்குவதுடன் சிறுநீர் பழுடைந்து செயலற்று இருந்தாலும் குணமாகும்

நெறிஞ்சி முல்லை சூரணமாகவோ கசயமாகவோ சாப்பிடுவது நல்லது.இளசான முள்ளங்கி சாறு 1/2 அவுன்ஸ் முதல் 1 அவுன்ஸ் வரை தினமும் 2 வேளை சாப்பிடுவதும் சிறுநீரகம் நன்கு செயல்பாடு உதவும்.

தர்ப்பைப்புல்லின் வேர், வெட்டி வேர், விலாமிச்சை வேர், கரும்பு வேர், பொன்னாங்கண்ணி வேர் ஆகியவற்றை இடித்து இரவில் பானைத்தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சிறுநீரக செயல்பாட்டுக்கு ஏற்ற உணவுகள்

சிறுநீரக செயல் பாடு நன்றாக இருக்கவும், பொதுவாக உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவு பொருள்களாகிய இளம் பச்சை முள்ளங்கி, கடுக்காய், நெல்லிக்காய், திராச்சை, புடலங்காய், பச்சைப்பயறு, சர்க்கரை, நெய், பால், தேன், மாதுளை, இந்துப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும்.

சிறுநீரக பிரச்சனை வராமலே தடுக்க

சிறுநீரக பிரச்சனை வந்த பின் அவதிப்படுவதை விட வராமலே தடுத்துக் கொள்ள அன்றாடம் முடிந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் . உணவில் புடலங்காய் கூட்டு, வாழைத்தண்டு பொரியல், முள்ளங்கி சாம்பார், தர்ப்பூசணிப்பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 4 =