சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் ஒரு முழுமை பெற்ற மருத்துவம்

சித்த மருத்துவம்

தற்போது மருத்துவத்துறையில் அதி நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் கையப்படுகின்றன.

மருத்துவத்தில் நோய்களுக்கு உடல் கூறு வாரியாக காது, மூக்கு, தொண்டை, கண், இதயம், குடல், எனத் தனியாக மருத்துவர்களும், குழந்தை நோய் சிறப்பு மருத்துவர், மனோ தத்துவ மருத்துவர்கள், முட நீக்கியல், நிரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் என ஆங்கில மருத்துவத்துறையில் வகைப்படுத்தப்பட்டு மருத்துவத் தொழில் புரிந்து வருகின்றனர். அதனால் நோய் கண்டறியும் அதி நவீன கருவிகளை கொண்ட பரிசோதனை கூடங்களும் பெருகி வருகின்றன.

செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற
சித்தர் பிறந்த தமிழ்நாடு

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரிசோதனை முறைகளும் சித்தமருத்துவத்தில் கையப்பட்டுள்ளன. எண் வகை தேர்வு எனப்படும் நாடி, கண், மூக்கு, நிறம், மலம், சிறுநீர், குரல், உடல் பாகங்கள் ஆகிய எட்டின் குறிவைகளை ஆராய்ந்து நோய்களை கண்டறிந்தனர்.

சிறுநீரில் நல்லெண்ணையை விட்டு முறையையும் அத்துடன் பிள்ளை வாகடம்(Pediatric ) நயன விதி (Opthalamolgy) என்னும் கண் மருத்துவம், மாதர் மருத்துவம்,யாக்கையியல்(Anotomy) போன்ற துறைகளையும் பெற்று சித்த மருத்துவம் முழுமை பெற்ற மருத்துவமாகத் திகழ்கிறது.

Leave a Comment

nineteen − 8 =

error: Content is protected !!