மூலிகைகள்

சிகைக்காய் மருத்துவ பயன்கள்

மருத்துவ பயன்கள் - சிகைக்காய் மருத்துவ பயன்கள்

சிகைக்காய் கூந்தல் பராமரிப்பு மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த மூலிகையாகும். தலைமுடி பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண ஒரே மூலிகை சிகைக்காய் மட்டுமே.

மூக்கின் சிகிச்சைக்கு முக்கியமாம் பேதியையுண்
டாக்குவம ணத்தை யழைப்பிக்குந் – தேய்க்கும்
வகைநெய்ச்சிக் கைபோக்கு மாதரசே ! நாளுஞ்
சிகைக்கா யதனைத் தெரி

குணம்

சிகைக்காயானது நாசியுட் புரிகின்ற நோய்களுக்கு நசிய சிகிச்சைகளுக்கு முக்கிய மருந்தாகும். பலவித நெய்ச்சிக்குகளை நீக்கும் என்க.

உபயோகிக்கும் முறை

இதற்க்கு வாந்தியையும் பேதியையும் உண்டாக்குகின்ற குணமுண்டு. ஆதலால் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும்போது சிகைக்காய் பொடியில் சிறிது விரலால் தொட்டு தொண்டையில் விட்டு துழாவ குமட்டல் உண்டாகி உள்ளிருக்கும் சளியை வெளியேற்றும்.

பயன்கள்

  • எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சிகைக்காய் பொடி தேய்க்க தேகத்தில் உள்ள அழுக்கை அகற்றும். சொறி, சிரங்கு முதலியவற்றை நீக்கும்.
  • தலைக்கு தேய்த்து குளித்து வர கூந்தல் செழிப்பாக வளர செய்யும். பொடுகை நீக்கும்.
  • சிகைக்காயை சுட்டு கரியாக்கி நல்லெண்ணையில் குழைத்து மண்டை கரப்பான், தேக கரப்பான் இவைகளுக்கு தடவி வர ஆறும்.

இயற்கை முறையில் சிகைக்காய் தயாரிக்கும் முறை

https://www.siddhamaruthuvam.in/இயற்கை-முறை-சிகைக்காய்.html

Leave a Comment

thirteen − ten =

error: Content is protected !!