மூலிகைகள்

இரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயத்திற்கு வலிமை தரும் சாத்துக்குடி

சாத்துக்குடி இனிப்பு சுவையுடைய சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். சத்துக்குடிப்பழம் ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இருதயத்திற்கு நல்ல வலிமையை கொடுக்கிறது.

சொல்லு மிருதயத்தின் சோர்வை யற நீக்கும்
நல்லுதிர மேபரவும் நாவிற்கு – வல்லுருசி
உண்டாமெந் நோய்க்கு முதவுநல்ல சாத்துக்குடி
கண்டறிந்து மாதே களி

குணம்

எவ்வித ரோகத்திற்கும் உபயோகப்படுகின்ற சாத்துக்குடிப் பழத்தினால் இருதயபலம், சுத்த ரத்தம், நாவின்ருசி முதலியவை உண்டாகும் என்க.

பயன்கள்

  • சாத்துக்குடிப் பழத்தை தினந்தோறும் ஆகாரத்திற்கு பின்பு சாப்பிட்டு வர இருதயத்திற்கு பலத்தை கொடுக்கும். நல்ல இரத்தத்தை தேகத்தில் பரவுப்படி செய்யும்.
  • தினமும் சாத்துகுடிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நாவின் அரோசகத்தை மாற்றி ருசியையுண்டாக்கும். இரத்தத்திலுள்ள மாசுக்களை நீர் மூலம் வெளியாக்கும்.
  • சாத்துக்குடி சீரண சக்தியை அதிகப்படுத்தும், மலச்சிக்கலையும் நீக்கும். எவ்வித நோயாளிகளும் சாப்பிடலாம்.
  • இரத்தசோகை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி பழத்தை சாறு பிழிந்து பானமாக சாப்பிடலாம்.
  • சில சாத்துக்குடி பழங்கள் புளிப்பு சுவையை பெற்றிருக்கும், அவைகள் கபத்தை விருத்தி செய்து தேக ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். ஆகையால் புளிப்பு சுவை பழத்தை தவிர்ப்பது நல்லது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!