மூலிகைகள்
தாம்பத்ய உறவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சாதிக்காய்

சாதிக்காய் மர வகையை சேர்ந்தது, நறுமணம் கொண்ட இலையையும் மஞ்சள் நிற பூவையும் கொண்டது. சாதிக்காய் அபிஷேகம் செய்யப்படுகின்ற வாசனை திரவிய பொடியில் சாதிக்காயும் சேர்க்கப்படுகிறது. மிகுந்த நறுமணமுடைய சாதிக்காய் அதிக மருத்துவ பயனுடையது.
தாதுநட்டம் பேதி சருவாசி யஞ்சிரநோ
யோதுசுவா சங்காச முட்கிரணி – வேதோ
டிலக்காய் வரும்பிணிபோ மேற்றமயல் பித்தங்
குலக்கா யருந்துவர்க்குக் கூறு
குணம்
சாதிக்காய்க்கு விந்து நஷ்டம், தலை நோய், அதிசாரம் ஆகிய வாதங்கள், இரைப்பு, இருமல், உஷ்ணவாத கிராணி ஆகியவை தீரும். பித்தமும், மயக்கமும் அதிகரிக்கும்.
மருத்துவ பயன்கள்
- சாதிக்காய் பொடியை 20 கிராம் அளவு பாலில் கலந்து ஒரு நாளைக்கு 2-3 வேளை சாப்பிட்டு வர விந்து கட்டும், ஆண்மை அதிகரிக்கும், மலட்டு தன்மை குணமாகும். இது விறைப்பு தன்மையை உண்டாக்கி நீண்ட நேர தாம்பத்யத்தை கொடுக்கிறது.
- 20 கிராம் அளவாக பாலில் கலந்து சாப்பிட்டு வர இரைப்பைக்கும், ஈரலுக்கு வலுவை சேர்க்கும் மேலும் நடுக்கம், பக்கவாதம், ஒக்காளம், வாந்தி இவற்றை போக்கும்.
- சாதிக்காயுடன் சந்தனமும் மிளகும் சேர்த்து மை போல் அரைத்து பருக்களின் மீது பூசி வர பருவும், கருமை நிற தழும்பும் மறைந்து விடும்.
- சாதிக்காய் கொட்டை ஓட்டின் மீது மெல்லிய தோல் போன்று செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுவது ‘ சாதி பத்ரி’ எனப்படும். இது மசாலாப்பொருள்களுடன் சேர்க்கப்படுகிறது.வெற்றிலையுடன் சேர்த்து இதை உண்பதுண்டு. இது செரிமான சக்தியை கொடுக்கும்.
- குழந்தைகளுக்கு சொரசொரப்பாக தேமல் போன்று காணப்பட்டால் சாதிக்கையை நீரில் உரைத்து பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் தடவி வர குணமாகும்.
- சாதிக்காய், சீரகம், சுக்கு – இவற்றை தூளாக்கி வைத்துக்கொண்டு சாப்பாட்டிற்கு முன் ஒரு சிட்டிகை அளவு உட்கொள்ள வயிற்றில் உள்ள வாயுவை நீக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
- சாதிக்காய் தைலம் பல்வலிக்கு சிறந்த மருந்தாகும்.