அழகு

சருமம் பொலிவு பெற இயற்கை வழிமுறைகள்

சருமம் அழகு பெற

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. நிலா முகம், பால் வடியும் முகம் என்றெல்லாம் வர்ணிப்பார்கள். அத்தகைய முகம் அமைய உள்ளும் புறமும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சருமத்தில் எண்ணெய் பசை சருமம், வறட்சியான சருமம், சுருக்கமான  சருமம் என்று பல வகை உண்டு. இவ்வாறு உள்ள சரும பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்பதை காணலாம் .

தேவையான மூலிகைகள்

  • வெட்டிவேர் – 100 கிராம்
  • நன்னாரி – 100 கிராம்
  • திருநீற்றுப்பச்சிலை – 100 கிராம்
  • மாசிப்பச்சிலை – 100 கிராம்
  • பச்சரிசி – 100 கிராம்
  • பாசிப்பயறு – 100 கிராம்
  • சந்தனம் – 100 கிராம்
  • மரமஞ்சள் – 50 கிராம்

இவற்றை இடித்து வைத்துக்கொண்டு தலைக்கும் உடம்புக்கும் அன்றாடம் தேய்த்துக்குளிக்க சருமம் பளபளப்பாக இருக்கும். முகம் வசீகரமடையும். உடல் நறுமணங்கமழும்.

Leave a Comment

eight + 11 =

error: Content is protected !!