மூலிகைகள்

சந்தனத்தின் மருத்துவ குணங்கள்

மருத்துவ பயன்கள் - சந்தனத்தின் மருத்துவ குணங்கள்

மாற்றடுக்கு இலைகளை கொண்ட மரம். இதன் உலர்ந்த கட்டை நறுமணம் கொண்டது. சந்தனத்தில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வகைகள் உண்டு. செஞ்சந்தனமே சிறப்புடையது. தமிழகத்தின் மலைக்காடுகளில் தானே வளர்கிறது.

சந்தனஞ் சீதோஷ்ணம் சார்ந்திடுத் தன்குணத்தால்
வந்ததிரி தோஷ மனப்பிரமை – தொந்தசுரம்
மேகந் தனித்தாகம் வெப்புசொறி யும்போக்கு
மாகந் தனக்குறுதி யாம்

குணம்

நல்ல சந்தனத்தால் விவேகமும், மனமகிழ்ச்சியும் உண்டாகும். சரும பொலிவு பெறும். நாவறட்சி, உட்சூடு, நமைச்சல் இவைகளையும் போக்கும்.

பயன்கள்

  • நல்ல வாசனை பொருந்திய சந்தனக்கட்டை 20 கிராம் எடுத்து நன்றாக இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு 300 மி.லி நீரில் போட்டு காய்ச்சி 150 மிலி வரை கொதிக்கவைத்து வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி அளவு குடிக்க நீர்க்கோவை, காய்ச்சல், மார்புதுடிப்பு, மந்தம், இதயவலி இவைகளை குணமாக்கும். இது இரைப்பையின் துர்பலத்தையும், பித்தத்தால் ஏற்பட்ட அழலை, தாகம் முதலியவற்றை குணப்படுத்தும்.
  • சந்தனத்தூளுடன் எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவ முகப்பரு, சொறி, தவளை சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.
  • பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து சுண்டக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டை சூடு, மேக அனல், சிறுநீர் பாதை நோய்கள், அழற்சி ஆகியவை நீங்கும்.
  • சந்தனத்தை சிறுதுண்டுகளாக நீரில் ஊறவைத்து மைபோல் அரைத்து சுண்டக்காய் அளவு பாலில் கலந்து இரவு ஒருவேளை மட்டும் 3 வாரங்களுக்கு சாப்பிட்டு வர வெள்ளை, மேக நோய்கள் குணமாகும்.
  • 15 மி.லி நெல்லிக்காய் சாற்றில் சுண்டக்காய் அளவு சந்தனத்தூளை கலந்து 40 நாட்கள் ஒருவேளை குடித்து வர மதுமேகம் தீரும்.

Leave a Comment

14 − three =

error: Content is protected !!