மூலிகைகள்

கருப்பை பலம் பெற… சதகுப்பை

சதகுப்பை

சதகுப்பை கீரைவகையை சேர்ந்தது. இதன் விதைகளே சதகுப்பை எனப்படும். இது சீரகம், சோம்பு போன்று சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கீரைக்கு சோகிக்கீரை என்று பெயர்.

வாதமோடு சூதிகா வாதஞ் சிரசுநோய்
மோதுசெவி நோய்கபநோய் மூடுசுர – மோதுகின்
மூலக் கடுப்பு முதிர்பீந சம்போக்கு
ஞாலச் சதகுப்பை நாடு

குணம்

சதகுப்பை வாதரோகம், அசிர்க்கரம், தலை வலி, கர்ணசூலை, சலதோசம், கபரூட்சை, ஆசன கடுப்பு, சல பிநசம் ஆகிய இவைகள் நீங்கும் என்க.

பயன்கள்

  • சதகுப்பை, கருஞ்சீரகம், மர மஞ்சள், இவற்றை சமனெடையாக பொடித்து சமன் பனைவெல்லம் சேர்த்தரைத்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு 5 நிமிடம் கழித்து சோம்பு குடிநீர் கொடுத்து வர உதிர்ச்சிக்கல் நீங்கி கருப்பை பலப்படும். கர்ப்பம் தரிக்கச்செய்யும்.
  • சதகுப்பை சூரணம் ஒரு கிராம் அளவு எடுத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர பிசியின்மை போக்கும். வாத நோயை கட்டு படுத்தும். இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் உள்ள மாசுக்களை அகற்றும்.

Leave a Comment

12 + eighteen =

error: Content is protected !!