மூலிகைகள்

உடல் பருமனுக்கு சிறந்த உணவு கொள்ளு

.jpg - உடல் பருமனுக்கு சிறந்த உணவு கொள்ளு

‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி உள்ளது கொள்ளுவில். இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இதனை ரசமாக வைத்து உண்ணப்பது மிகுந்த நன்மை என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. கொள்ளு கடின உழைப்பாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.

குடல்வாதங் குன்மமுண்டாங் கொண்மருந்தோ நாச
மடலேறு பித்தமிக வாகுங்- கடுகடுத்த
வாதநீ ரேற்றமொடு மன் னுகுளிர் காய்ச்சலும்போஞ்
சாதிநறுங் கொள்ளுக்குத் தான்.

குணம்

வாத வலி, நீரேற்றம், நளிர் சுரம், மருந்தின் வீரியம் இவைகள் போம் என்க. இது பித்தத்தை உண்டாக்கும் என்க.

உபயோகிக்கும் முறை

இதை வேகப்போட்டு வடித்தெடுத்த நீரில் புளி, உப்பு, காரமிட்டு ரசமாக வைத்து உபயோகப்படுத்துவதுண்டு.

பயன்கள்

  • இது வாயுவை நீக்கும். அடிக்கடி வாயு ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொள்ளு சிறந்த உணவாகும். இது தேகத்திலுள்ள நீரை வற்றடிக்கும்.
  • நீர்தாரைகளில் ஏற்படும் கற்களை பொடி பொடியாக கரைத்து நீரின் வழியே வெளியாக்கும்.
  • பெண்களுக்கு ஏற்படும் உத்திரக்கட்டை வெளியாக்கும்.
  • இதை அதிகமாக உபயோகித்தால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு இதனால் தலை சுற்றல், வாந்தி, வயிற்றுக்கடுப்பு இவைகள் உண்டாகும்.

Leave a Comment

five × 1 =

error: Content is protected !!