மூலிகைகள்
கொய்யாவின் மருத்துவ பயன்கள்
முழுமையான எதிரடுக்கில் அமைந்த இலைகளையும் வெண்மை நிற மலர்களையும் உருண்டையான கனிகளையும், வழுவழுப்பான பட்டையையும் உடைய மரம். தமிழகத்தில் பழத்திற்காகப் பயிரிடப்படுகிறது. காடுகளில் தானே வளர்வதுண்டு. இலை, வேர், பட்டை, காய் ஆகியவை மருத்துவப் பயனுடையது. வாழைப்பழம் போன்று கொய்யாவும் தனி உணவாக பயன்படுகிறது.
இந்த இனத்தில் சிவப்பு, வெள்ளை என இருவகையுண்டு. இவைகள் நிறத்தில் பேதப்பட்டிருப்பினும் குணத்தில் ஒன்றாகும்.
திரிதோஷஞ் சென்னித் திருப்ப மரோசி
பெருமாந்தம் வாந்தி பொருமல்- கரப்பானு
மெய்யாய்ப் பரவுமல மேத்தவிடும் போகமுண்டாங்
கொய்யப் பழத்தினார் கூறு
கொய்யாவின் மருத்துவ பயன்கள்
- கொழுந்து இலையை மென்று தின்று இலகுவான உணவு உண்ண செரியாமை, மந்தம், குடல் வாயு குணமாகும்.
- ஒரு கை பிடி இலையை எடுத்து ஒரு மிளகாயுடன் வதக்கி 1 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி அரை மணிக்கு ஒரு முடக்கு வீதம் கொடுத்து வர வாந்தி, பேதி (காலரா), மந்தம், வாயுபொருமல், வறட்சி, தாகம் அடங்கும்.
- வேரை நசுக்கி இரவில் நீரில் ஊற வைத்து காலையில் 30 மி லி குழந்தைகளுக்குக் கொடுக்கப் பேதி நிற்கும். இந்நீரால் கழுவி வர வெளி மூலம் குணமாகும்.
- கொய்யாஇலை தளிர் அல்லது பிஞ்சை அரைத்து 10 கிராம் அளவு சாப்பிட வயிற்றோட்டம் உடனே நிற்கும்.
- இதன் தளிரை அரைத்து 10 கிராம் அளவு மூன்று நாள் சாப்பிட அதிக மாதவிலக்கு குணமாகும்.
- இதனை தொடர்ந்து சாப்பிட கண் சம்பத்தப்பட்ட நோய் வராமல் தடுக்கிறது.
- கொய்யாப்பழம் இரத்தசோகைக்கு சிறந்த மருந்தாகும், மலச்சிக்கலையும் நீக்கும்.