மூலிகைகள்
இதயம், மூளை, நரம்பை பலப்படுத்தும் கொட்டைக்கரந்தை
![கொட்டைக்கரந்தை பயன்கள்](https://www.siddhamaruthuvam.in/wp-content/uploads/2018/04/கொட்டைக்கரந்தை.jpg)
கொட்டைக்கரந்தை நறுமணம் உடைய இலைகளை கொண்ட மிகச்சிறுசெடி இனம். பந்து போன்ற செந்நிற பூங்கொத்தினை உடையது. தமிழகமெங்கும் வயல்வெளிகளில் நெல் அறுவைடைக்கு பின் வளரும். செடி முழுவதும் மருத்துவ பயனுடையது.
கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு
வெட்டை தணியுமதி மேகம்போந் – துட்டச்
சொறிசிரங்கு வன்கரப்பான் றேன்றா மலப்பை
மறிமலமுந் தானிறங்கு மால்
குணம்
கொட்டைக்கரந்தைக்கு வெள்ளை, ஒழுக்குபிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும். வெளிவராமல் தங்கிய மலத்தை போக்கும் என்க.
பயன்கள்
- கொட்டைக்கரந்தை செடியை பூ விடுவதற்கு முன்னதாகவே பறித்து நிழலில் உலர்த்தி இடித்து பொடிசெய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து சிறிது கற்கண்டு பொடி கலந்து சாப்பிட்டுவர வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம், மூளை, நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.
- கொட்டைக்கரந்தை பொடியுடன் கரிசலாங்கண்ணி பொடி இரண்டிலும் 5 கிராம் அளவு தேன் அல்லது நெய்யில் குழைத்து சாப்பிட இளநரை தீரும். உடல் பலம் பெறும்.