அழகு

கூந்தல் பராமரிப்பு

அடர்த்தியாக முடி வளர, கூந்தல் பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பது எப்படி|

பெண்களின் அழகுக்கு கூந்தல்தான் மூலதனம் ஏறக்குறைய எல்லாருக்கும் ஆரோக்கியமான நல்ல கூந்தல் இருக்கிறது. ஆனால் கவனக்குறைவாலும், கூந்தல் முறையாகப் பாதுகாக்காமலும், ஊட்டச் சத்துக் குறைபாட்டாலும் கூந்தல் வளர்ச்சி குறைதல் செம்பட்டை படருதல் முடி உதிர்தல், கூந்தல் வறட்சியாகி விடுதல் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.

அறிவியல் ரீதியாக முடி என்பது பாதி கார்பனும் 1/5 பாகம் நைட்ரஜனும், 1/5 பாகம் பிராண வாயுவும், 1/20 பாகம் ஜலவாயுவும், 1/20 பாகம் கந்தகமும் கலந்த கலவை உடைய திடப் பொருளாகும்.

கூந்தல் பராமரிப்புக்கு சில எளிய வழிமுறைகள்

வாரம் இருமுறை தேங்காய்ப் பாலை தலையில் ஊறவைத்து பிறகு தலையை அலசினால் கூந்தலின் வறட்சி போகும். முடி வேகமாக வளரும், செம்பட்டை மாறும்.

சிறிது அதிமதுர பொடியை பாலில் குழைத்து வெண்ணை போலானதும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி அடர்தியாகயும் நீளமாகவும் வளரும். முடி உதிர்தல் நிற்கும்.

கரிய போனத்தை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து பூசி வந்தால் தலைமுடி கருத்து வளரும்.

கரிசலாங்கண்ணி பொன்னாங்கண்ணி சாறு ஒரு பங்குடன் இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து முறுகக் காய்ச்சித் தினமும் தலைக்குத் தேய்த்து வர கூந்தல் பிரச்சனை ஏதும் இருக்காது.

சடாமாஞ்சில் 50 கிராம் அளவு எடுத்து அதனை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு குளிக்கும் போது தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி வளரும். வாசனையாகயும் இருக்கும்.

Leave a Comment

7 + twelve =

error: Content is protected !!