அழகுசித்த மருத்துவம்

சித்தர்கள் கூறிய 34 மூலிகைகளை கொண்டு இயற்கை குளியல் பொடி தயாரிக்கும் முறை

இயற்கை சுகந்த வாசனை பொடிகளிலே இந்த முறை பொடி மிகவும் கீர்த்திவாய்ந்ததாகும். இந்தப் பொடியை தயாரித்து உபயோகித்து வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது. மேனி மினுமினுப்பையும் யெளவனத் தோற்றத்தையும் பெறலாம். எப்பொழுதும் மேனியிலிருந்து ‘கம கம’ வென்று வாசனை வீசிக்கொண்டே இருக்கும்.

இந்த வாசனைப்பொடி தயாரிப்பது மிகவும் சுலபமே. தமிழ் மருந்துக்கடைகளில் எல்லா மூலிகைகளும் கிடைக்கும்.

தேவையான மூலிகைகள்

1.கஸ்தூரி மஞ்சள்
2.பூஞ்சாந்து பட்டை
3.கிளியூரம் பட்டை
4.சடா மஞ்சில்
5.பூலாங்கிழங்கு
6.சோம்பு
7.அன்னாசிப்பூ
8.லவங்க பத்திரி
9.வெட்டி வேர்
10.நன்னாரி வேர்
11.சிறுநாகப்பூ
12.கார்போக அரிசி
13.சண்பக மொட்டு
14.தாளிசபத்திரி
15.சாதிக்காய்
16.கவுளா
17.வெண் கோஷ்டம்
18.கிராம்பு
19.ஏலக்காய்
20.பச்சிலை
21.கோரைக்கிழங்கு
22.லவங்கப்பட்டை
23.மாகாளிக்கிழங்கு
24.மகிழம்பூ
25.ரோசா மொட்டு
26.மரிக்கொழுந்து
27.விளாமிச்சை வேர்
28.திரவியப்பட்டை
29.வெந்தயம்
30.சந்தனத்தூள்
31.எலுமிச்சை பழத்தோல் உலர்ந்தது
32.ஆரஞ்சு பழத்தோல் உலர்ந்தது
33.ஆவாரம்பூ
34.பூந்திக்கொட்டை

இந்த 34 மூலிகைச் சரக்குகளையும் சமஅளவு  ஒன்று சேர்த்து வெயிலில் உலர்த்தி எடுத்து இடித்து மெல்லிய துணியில் சலித்தெடுத்துக் காற்றுப் போகாதபடி ஜாடியிலே நன்றாக மூடி வைக்கவேண்டும்.

இந்தச் சுகந்தப் பொடியைத் தேய்த்து குளித்துபாருங்கள். அன்று முழுவதுமே மனத்துக் குகந்த நறுமணம் கமகம வென்று வீசிக்கொண்டிருக்கும்.இந்தச் சுகந்த பொடியில் சேரும் சரக்குகள் உடலின் தோலுக்கு வாசனையைத் தருவதுடன் ரத்தத்தையும் பரிசுத்தி செய்யக் கூடியவை. தோலை வியாதி சமூகத்திலிருந்து காப்பாற்றுபவை.

இந்தச் சுகந்தப் பொடியைத் தினந்தோறும் உபயோகித்துவந்தாலே தோலின் துர்நாற்றம், வியர்வை நாற்றம் ஸ்திரமாய் விலகும். நமைச்சல், அரிப்பு, எரிச்சல், புள்ளிகள், அக்கிச்சொறி முதலியன நீங்கும்.விசேஷகாந்தி, லாவண்யம், மிறுதுத் தன்மை, முறமுறப்புடன் ஒரு வழவழப்பு விசேஷமாய் ஏற்படும். சோப்பைப் போலத் தோலின் பசையை அடியோடு போக்கித் தோலை வரள அடிக்காது. ரோமத்துவரங்களை அடைக்காமல் விரியச் செய்து தோலின் இயற்கை அலுவல்களைச் சிறப்புறச் செய்ய உதவும்.

உபயோகக் குறிப்பு

தேவையான அளவு சுகந்தப் பொடியை நீராடுவதற்கு கால்மணி நேரம் முன்பே கொஞ்சம் நீர் விட்டுக் கரைத்து வைத்துவிடவும். ஊறிய பிறகு உடலில் தேய்த்துக்கொள்ள மிகவும் சுகமாக இருக்கும். உடலில் எவ்வளவு அழுக்கு நிறைந்திருப்பினும் அழுக்கைச் சுத்தமாக அகற்ற இந்தப் பொடியே போதுமானது.

Herbal bath powder
Herbal bath powder

Buy Online : https://mellinaherbals.com/product/herbal-bath-powder/

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!