உடல் நலம்

குடற்புண், இரைப்பைப் புண் (அல்சர்) நோயும், அதற்கான தீர்வும்

வயிற்றுப்புண், குடல்புண் நீங்க
குடற்புண், இரைப்பைப் புண் குணமாக

மனித உடலின் அனைத்துப் பாகங்களிலும் தோன்றுகின்ற புண்களைப் போலவே இரைப்பையின் உட் பகுதியில் புண்கள் உண்டாகின்றன. வயின்றின் உட்ப்புறத்தில் உண்டாகும் வயிற்று புண் (peptic அல்சர்) என்று அழைக்கப்படுகிறது. இரைப்பையிலே அல்லது டியோடினம் எனப்படும். சிறுகுடலின் மேற்பகுதியிலும் இந்தப்புண் ஏற்படலாம். இந்தப்புண் ஏற்படும் இடத்தப் பொறுத்து இரைப்பையில் தோன்றினால் இரைப்பை புண் (gastric ulcer ) என்றும் குடலில் ஏற்பட்டால் டியோடின் அல்சர் (duodenal ulcer) என்றும் கூறப்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி – வயிற்றுக்குளிகளிலே காணும் வலி. இது லேசாக ஆரம்பித்து பிறகு கடுமையாக மாறும். காலை உணவுக்கு முன் வலி ஏற்படுவது அரிது சாதாரணமாக உணவுக்குப் பிறகு ஒன்று முதல் நான்கு மணிநேரத்திற்கு வலி உண்டாகும். சில சமயங்களில் இரவில் வலி கடுமையாக இருக்கும்.
இந்த வலியைத் தவிர நெஞ்சுக் கரிப்பு, ஏப்பம், மலசிக்கல், வயிற்று வீக்கம், பசி மந்தம், வாயில் நீர் பெருக்கம் முதலியவை இருக்கும்.

உணவுப் பையில் உணவை ஜீரணம் செய்வதற்க்காகக் கடிச்சத்து (அமிலம்) ஏற்படுகிறது இது அதிக அளவில் ஊறும்போது உணவுப் பையில் சிறிய காயம் ஏற்பட்டாலும் சத்துக் குறைவு ஏற்பட்டாலும் புண் ஆறாமல் அதிகரித்துக் கொண்டே போகும்.

இந்த நோய் தென்னிந்தியாவில் தான் அதிகமாகக் காணப்படுகிறது ஆகாரத்தில் சத்து இல்லாததுதான் முக்கிய காரணமாகும்.

நேரம் தவறி உண்பது இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது பவரான மாத்திரைகளை உட்கொள்வது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது மனா அமைதியின்றி அதிகம் கவலைப்படுவது போன்றவைகளினாலும் குடற்புண் ஏற்படுகிறது மதுவும் புகையும் தான் குடற்புண் வர அதிக காரணமாகிறது. நாள்பட்ட இரைப்பை புண் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டு வாந்தியும் வாந்தியில் இரத்தமும் வரும். புண் ஏற்பட்ட பகுதி கணையத்துடன் ஒட்டிக் கொள்வதாலோ- இரைப்பை அடைப்பு ஏற்படுவதாலோ- இறப்பை ஓட்டை விழுவதாலோ உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும்.

புளிப்பு காரம் உள்ள உணவுகள் எண்ணையில் பொரித்த தின்பண்டங்கள் ஊறுகாய்கள் போன்றவைகளை முற்றிலுமாக நீக்க வேண்டும். காப்பி – டீ இவற்றை ஒதுக்கி விடுவது நல்லது.

மருத்துவம் :

வெள்ளை குங்கிலியம் 50 கிராம் இளநீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் சுண்டிய பிறகு அரைத்து பொடி செய்து – காலை மாலை 2 கிராம் அளவு பசு வெண்ணையில் குழைத்து சாப்பிட்டு, பிறகு பால் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் முற்றிலும் குணமாகும். புண் ஆறும் வரை – மிளகாய், மிளகு, கடுகு, ஊறுகாய், காப்பி , டீ தவிக்கவும். ஆரஞ்சுப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வரவும்.

வாரம் இருமுறை அதிக காரம் புளி இல்லாமல் மணத்தக்காளி கீரை ரசம் வைத்து சாப்பிட்டு வரவும்.

Leave a Comment

fifteen + 11 =

error: Content is protected !!