உடல் நலம்

கீரைகளை சாப்பிடப் பழகவேண்டும்

சாப்பிடப் பழகவேண்டும் - கீரைகளை சாப்பிடப் பழகவேண்டும்

கீரை வகைகளில் மரக்கீரைகளும், கொடிக்கீரைகளும் உடலுக்கு மிகவும் நல்லது. முருங்கைக் கீரை, அகத்திக்கீரை மரத்தில் விளைகிறது.

அகத்திக்கீரை

வயிற்றில் இருக்கும் வேண்டாத தீயை அதாவது அகத் தீயைச் சரிப்படுத்துவது அகத்திக்கீரை, அதனால் இதை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையை வாரம் 2 நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது இதில் எல்லாச்சத்துக்களும் நிறைந்து உள்ளது. இதில் இருப்புச்சத்து நிறைந்து உள்ளதால் இரத்த சோகையை குணமாக்குகிறது.முருங்கைக்கீரை தோல்நோய்களை போக்குகிறது.
நீர்க்கடுப்பு, நீர் சுருக்கு ஆகியவற்றையும் குணமாக்குகிறது.

கோவைக்கீரை கொடியில் விளைவதாகும். முளைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பசலைக்கீரை, புளிச்சகீரை, முடக்கத்தான் ஆகிய கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ளவது மிக நல்லது.

பயன்கள்

  • கீரைகள் அமிலத்தன்மையை சீராக்கும்.
  • வைட்டமின், தாது உப்புகள் ஆகியவை சத்துக்கள் கிடைக்கிறது.
  • மலச்சிக்கலை போக்கி குடலை சுத்தம் செய்கிறது.
  • இரத்த சோகையை போக்குகிறது.
  • தோல் நோய்களை நீக்குகிறது.

Leave a Comment

7 − 6 =