உணவே மருந்து
கறிவேப்பிலை பொடி செய்முறை
ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட கறிவேப்பிலை பொடி செய்முறை
தேவையானவை
- கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- தோல்நீக்காத உளுந்து – 250 கிராம்
- மிளகாய் – 10 கிராம்
- நல்லெண்ணெய்
- பெருங்காயம்
- உப்பு
செய்முறை
கறிவேப்பிலை, உளுந்து, மிளகாய் இவற்றை தனித்தனியாக நல்லெண்ணையில் நன்றாக வதக்கி வைத்துக்கொண்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.
கறிவேப்பிலை பொடியை சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம் .
பயன்கள்
- பசியின்மை, செறியாமையை குணப்படுத்துகிறது.
- இளநரையை போக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
- கண் பார்வைக்கு சிறந்தது.
- மூலச்சூடு, கருப்பைச்சூடு, மலச்சிக்கலை குணமாக்குகிறது.