கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்
பெருஞ் செடி இனம் சேர்ந்தது. ஆயினும் மரம் போல் கிளைகள் விட்டு செழிப்பாய் வளரக்கூடியது. கறிவேப்பிலை எனப்படும் கறிவேம்பு. காடுகளிலும், மலைகளிலும் அடர்த்தியாகக் கூட்டங் கூட்டமாய் வளரும் அருகில் சென்றால் வாசம் மூக்கை கொள்ளை கொள்ளும் மனம். நிலங்களில், தோட்டங்களில், வீட்டுக் கொல்லை புறங்களில் கறிவேம்பு வளர்க்கப்படுகிறது.
கறிவேம்பின் வேர், பட்டை, ஈர்க்குப் போன்றவை வேறு நோய்களுக்கு உபயோகப்படுவன.
கறிவேப்பிலை குழம்பில், மாமிசச் சமையலில், மிளகுநீரில் அதாவது இரசத்தில், தயிர்த் தாளிப்பில், நீர் மோரில் கறிவேப்பிலையைச் சேர்ப்பர் நம்மவர்கள்.கறிவேப்பிலைத் துவையல் சுவையானது.
உடல்பருமன்
உடற்பருமன் குறைக்க கறிவேப்பிலை பயன்படுகிறது. உடலில் இருக்கும் மிகுதியான கொழுப்பை அகற்றவும், இரத்தத்தில் அதிகமாக உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் செய்கிறது. உடல்பருமன் உள்ளவர்கள் கறிவேப்பிலையை உட்கொள்வதுடன் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான பத்திய உணவையும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
பசியின்மை, செறியாமையை குணப்படுத்த
பசியினைத் தூண்டி, செரிமானத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதில் கறிவேப்பிலைக்குத் தனிப்பங்கு உண்டு.
இளநரை குணப்படுத்த
இளநரையை தவிர்க்க முறையாக கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.தேங்காய் எண்ணையுடன் கறிவேப்பிலை சாறு கலந்து தேய்த்து வந்தால் தலை முடி கருமை நிறத்தோடு ஆரோக்கியமாக இருக்கும்.
நல்ல கண்பார்வைக்கு
கறிவேப்பிலையில் வைட்டமின் எ சத்து மிகுந்து இருப்பதால், இது கண்ணுக்கு மிகச்சிறந்த உணவாக இருக்கிறது. தொடர்ந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு வருவதை தவிர்க்கலாம்.
மலச்சிக்கல் குணப்படுத்த
வெந்நீரில் கறிவேப்பிலை இலை ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்து, தேன் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
மூலநோய், இரத்த மூலம் குணமாக
மூலச்சூடு, கருப்பைச்சூடு ஆகியவற்றைப் போக்குவதில் கறிவேப்பிலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.