அழகு

கரும்புள்ளிகள் மற்றும் தேமல் மறைய இயற்கையான வழிமுறைகள்

மற்றும் தேமல் மறைய இயற்கையான வழிமுறைகள் - கரும்புள்ளிகள் மற்றும் தேமல் மறைய இயற்கையான வழிமுறைகள்

கரும்புள்ளிகள்

கரும்புள்ளி ஏற்பட முகப்பரு காரணமாகிறது. முகப்பருவை நகத்தால் கிள்ளி விடுவதும் கரும்புள்ளிகள் ஏற்பட காரணமாகிறது. அவைகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் நிலைத்து விடுகின்றன.

கரும்புள்ளிகள் மறைய மருத்துவ முறைகள்
  • ஜாதிக்காயை அரைத்து கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
  • நன்றாக கனிந்த வாழைப்பழத்தை பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரால் முகம் கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.

பால் தேமல்

ஊட்டச்சத்து குறைபாடு ஒவ்வாமை இவைகளால் ஏற்படும் நிறமாற்றமே தேமல். முதலில் புள்ளிகளாக தோன்றி நாளடைவில் அகலமாகப் பரவி அழகை சிதைக்கும்.

பால் தேமல் மறைய மருத்துவ முறைகள்

சீமை அகத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வெண்ணெய் போல் அரைத்து காலை மாலை பூசி வர பால் தேமல் மாறும்.

  • துளசி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து தடவி குளித்து வர தேமல் மறையும்.
  • பூவரசன் விதையை சேகரித்து எலுமிச்சை பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து தேமலின் மீது இரவில் தடவி காலையில் கழுவி விட வேண்டும்.

கருந்தேமல்

கருந்தேமல் ஒரு வித நிறமாற்ற நோய்தான். இதை மங்கு என்றும் சொல்லுவதுண்டு, ஒவ்வாமையாலும் வரும். குறிப்பாக இராசயனக் கலவையால் ஆன பொட்டு, சந்தனம், குங்குமம் இவைகளால் கூட கரும்படைகள் வரலாம்.

கருந்தேமல் மறைய மருத்துவ முறைகள்
  • கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளின் தோல் சிறிதுடன் கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு வைத்து அரைத்து தடவ நெற்றியில் ஒவ்வாமையால் ஏற்படும் கரும்படை நீங்கும்.
  • மருதாணி இலையை ஒரு கையளவு அதனுடன் எலுமிச்சை தோல் மற்றும் ஆரஞ்சு பழத்தோல் சேர்த்து அரைத்து பூசிக்குளிக்க கரும்படை நீங்கும்.
  • அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்து குளித்து வரத் தீரும்.

Leave a Comment

18 + 15 =

error: Content is protected !!