உடல் நலம்

கருப்பை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு - கருப்பை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

பெண்களுக்கு முக்கியமான உறுப்பு கருப்பை. கருப்பை இல்லையென்றால் பெண்மை இல்லை. கருப்பை இருந்தும் சிலர் பூப்படையாமல் இருப்பது உண்டு. இதுவும் பெரிய பிரச்சினைதான். ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வரவேண்டும். அதிகம் குறைவில்லாமலும், அதிகம் ஆகாமலும் இருக்கவேண்டும். அப்படி மாதவிலக்கு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கருப்பை வலி, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் கருப்பை பாதிப்பு ஏற்படும்.

கருப்பை பிரச்சனைகள் வர காரணம்

உடல் உஷ்ணம், அதிக கார உணவு, மசாலா உணவு, அதிக மருந்து மாத்திரைகள், இரசாயன கலந்த உணவுகள், கருப்பை கட்டிகள் போன்ற பல காரணங்களால் கர்ப்பப்பை பிரச்சனைகள் வருகிறது.

கர்ப்பப்பை நோய்களுக்கு மூலிகை மருத்துவம்

ஆவாரம்பூ, பொடி கஷாயம், செம்பருத்திப்பூ, ஓரிதழ் தாமரை பொடி, திரிபலா பொடி, வெள்ளருக்கு பொடி, சோற்றுகற்றாழை வெந்தயம், கரிசாலைபொடி, வல்லாரை பொடி போன்ற மூலிகைகள் தொடர்ந்து சாப்பிடுவது மூலம் நோய்களை சரி செய்யலாம்.

கருப்பையில் ஏற்படும் கிருமித்தொற்றுக்கு

கருப்பையில் ஏற்படும் கிருமித்தொற்று குறைபாட்டிற்கு நெருஞ்சில் முள்ளை பசுவின் பாலில் வேக வைத்து இடித்து சூரணம் செய்து காலை மாலை வேலைக்கு 2 கிராம் அளவு இளநீரில் கலந்து சாப்பிட குணமாகும். சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தால் இம்பூறல் வேர்ப்பட்டை 2 கிராம் எடுத்து இத்துடன் கலந்து அருந்தலாம். உடலைக் குளிர வைக்க சீரகத் தண்ணீர் குடிப்பதும் நல்லது.

கருப்பை இறக்கம்

பழம்புளி, மஞ்சள் கரிசலாங்கண்ணி சம அளவு அரைத்து 2 நெல்லிக்காய் அளவு காலை மாலை 12 நாட்கள் சாப்பிட குணமாகும்.

உணவு முறைகள்

பூசணிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், சுரக்காய், தினம் ஒரு கீரை, ஆவாரம்பூ கூட்டு, வெந்தயக்கஞ்சி, உளுந்து கஞ்சி, மோர் சாதம், காரமில்லாத உணவுகள் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியது

மசாலா உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், மாமிச உணவுகள், புளிகுழம்பு, புளி சேர்த்த உணவுகள் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். காபி போன்ற பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

Leave a Comment

two × 2 =

error: Content is protected !!