உணவே மருந்து

கருணைக்கிழங்கு குழம்பு

குழம்பு - கருணைக்கிழங்கு குழம்பு

தேவையானவை

 • கருணைக்கிழங்கு – 1/4 கிலோ
 • சின்ன வெங்காயம் – 50 கிராம்
 • தக்காளி – 2
 • மஞ்சள் தூள்
 • மிளகாய் தூள்
 • மல்லி தூள்
 • புளி சிறிதளவு
 • நல்லெண்ணெய்
 • கறிவேப்பிலை
 • வெந்தயம்

செய்முறை

கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு பாத்திரத்தில் நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து அத்துடன் புளி கரைசல் சேர்த்து கொதித்தவுடன் கருணைக்கிழங்கை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்

பயன்கள்

 • வாரம் ஒரு முறை கருணைக்கிழங்கை சமைத்துண்ண உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கிறது.
 • மூல நோய்களுக்கு ஏற்ற உணவாக கருணைக்கிழங்கு திகழ்கிறது.
 • கருணைக்கிழங்கு சித்தமருத்துவத்தில் மூல நோய் லேகியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

வீடியோ

Leave a Comment

one × one =

error: Content is protected !!