7 வகையான நோய்களை தீர்க்கும் கண்டங்கத்தரி
முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறு கத்தரிக்காய் வடிவிலானகாய்களையும் மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம். இலை, காய், பூ, பழம்,விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
காச சுவாசங் கதித்தக்ஷய மந்தமனல்
வீசுசுரஞ் சந்தி விளைதோஷ-மாசுருங்கா
லித்தரையு ணிற்கா வெரிகாரஞ் சேர்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்.
மருத்துவ பயன்கள்
வெப்பமும் கார்ப்புமுள்ள கண்டங்கத்திரியினால் காசம், சுவாசம், க்ஷயம், அக்கினிமந்தம், தீச்சுரம், சந்நிபாதம், வாதரோகம் ஏழுவகைத் தோஷங்கள், ஆகிய இவைகள் போகும்.
கோழையகற்றியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் குடல் வாயு அகற்றியாகவும் செயற்படும்.
வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராகக் காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மி. லி வீதம் குடிக்க சீதளக்காய்ச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்தசுரமும் தீரும்.
கண்டங்கத்தரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம் அரிசி திப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுஅரை லிட்டராக்கி 100 மி. லி. வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி (க்ஷயம்) ஈளை,இருமல், கபஇருமல், பீனிசம் தீரும்.
பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப் பிடிக்க பல் வலி, பல் அரணை தீரும்.