உடல் நலம்

ஒற்றைத்தலைவலிக்கு இயற்கை முறையில் நிரந்தர தீர்வு

தலைவலி - ஒற்றைத்தலைவலிக்கு இயற்கை முறையில் நிரந்தர தீர்வு

ஒற்றைத் தலைவலி – அது தான் மைக்ரேன்(Migraine) என்று சொல்லப்படுகிறது . சுமார் 80% பெண்களுக்கு 25 முதல் 35 வயது வரை அதிகமாக வருகிறது. ஆண்களுக்கு இதைவிட குறைந்த அளவிலேயே இத்தலைவலி வருகிறது. இதற்கு உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் கண் பாதிப்பு – நரம்புத் தளர்ச்சி போன்றவை உண்டாகும்.

தலைவலி வந்தவுடன் சிலருக்கு குமட்டல் – வாந்தியும் உண்டாகும். சிலருக்கு சிறிது சத்தத்தை கேட்டாலும் தலைவலி அதிகமாகும். எரிச்சல் – படபடப்பு – களைப்பு – அமைதியின்மை – மிரட்சி போன்றவை உண்டாகும். இவர்களுக்கு பசியும் எடுக்காது. மூக்கு அடைத்துக்கொண்டு மூக்கிலிருந்து நீர் கசியும்.

வேலைப்பளு மற்றும் பணியிடத்தில் தோன்றும் பிரச்சினைகளாலும் தோன்றும் . மாதவிலக்கால் தோன்றும் பிரச்சினைகளாலும் அதிகமாக இத்தலைவலி உண்டாகும். அதிக சூரிய வெப்பம் – வானிலை மாற்றங்கள் – புழுக்கமான அறைகளில் வசித்தல் – மது – தயிர் – அதிகமாக இறைச்சி சாப்பிடுதல் – அதிக அளவு கொழுப்பு – பாலாடைக்கட்டி – சாக்லேட் – பன்னீர் – ஈரல் – பாதம் – மீன் சாப்பிடுவதாலும் அதிகமாகும். சரியான உறக்கம் இல்லாமையாலும் அதிக கோபப்படுவதினாலும் இது உண்டாகும்.

இது பரம்பரையாக வரக்கூடியது. மீண்டும் மீண்டும் ஏற்படுவது உண்டு. பீனிசம், பல் சொத்தை பற்களின் வேர் பாதிக்கப்படுதல் கழுத்துத் தேய்மானம் போன்றவற்றாலும் வருகிறது.

மருத்துவம்

சுக்கு 10 கிராம் – இந்துப்பு 10 கிராம் – அதிமதுரம் 10 கிராம் – திப்பிலி மூலம் 10 கிராம் – வசம்பு 10 கிராம் – வெங்காயம் 10 கிராம் ஆகியவற்றை இடித்து அத்துடன் எருக்கம் பழுப்பு இலைச்சாறு 100 மி.லி நல்லெண்ணெய் 250 மிலி கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வர தீரும்.

கருஞ்சீரகம் 50 கிராம் பொடி செய்து நல்லெண்ணெய் கால் லிட்டருடன் பசுநெய் 10 கிராம் வெற்றிலைச் சாறு 10 மி லி எலுமிச்சம்பழச் சாறு 10 மி லி கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வர தீரும்.

குப்பைமேனிச் சாறு 100 மிலியுடன் நல்லெண்ணெய் கால் லிட்டர் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வர தீரும்.

Leave a Comment

1 + 12 =

error: Content is protected !!