ஆஸ்துமாவை குணமாக்கும் எருக்கு
அகன்று எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய பெரிய நேராக வளரும் பாலுள்ள குறுஞ்செடிகள். செடி முழுவதும்மென்மையான வெள்ளைக் கம்பளியால் மூடப்பட்டிருக்கும். விதைகள் பஞ்சுடன் இணைந்திருப்பதால் காற்றில் பறக்கக்கூடியவை. இலை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வெள்ளை மலர்களையுடையவெள்ளெருக்கு சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல்ஆகிய குணங்களையுடையது.
மருத்துவ பயன்கள்
ஆறாத புண்களுக்கு அதன் உலர்ந்த இலைப்பொடியை தனித்தோ அல்லது தேங்காய் எண்ணையுடன் கலந்தோ போட்டு வரலாம், எருக்கம் பூவின் நஞ்சு பாகத்தை நீக்கி விட்டு பூ 40 கிராம், மிளகு 20 கிராம், லவங்கம் 10 கிராம் கலந்து வெந்நீர் விட்டு அரைத்து மிளகளவு மாத்திரைகள் செய்து உலர்த்தி 40 நாட்கள் காலை மாலை மற்றும் இரவில் சாப்பிட்டு வர ஆஸ்துமா என்னும் கடின இரைப்பு நீங்கும்.
இலையை அரைத்துப் புன்னைக்காயளவு பாம்புக்கடித்தவர்க்கு உடனே கொடுக்கலாம்.
எருக்கம் பழுப்பு சாறு அரைலிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் கலந்து வசம்பு, பெருங்காயம், இலவங்கப்பட்டை, பூண்டு ஆகியவற்றை 10 கிராம் அளவு தூள் செய்து கலக்கி பதமுறைக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி 4 துளி காதில்விட்டு வரச் சீழ் நாற்றம், இரத்தம் வடிதல் ஆகியவை தீரும்.
தேள்கடிக்கு சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக்கட்டலாம்.
எருக்கு 3 துளிச்சாறு,10 துளித் தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.
30 மி.லி விளக்கெண்ணெயில் 3 துளி எருக்கு இலைச்சாறு விட்டுச்சாப்பிட இறுகிப்போன மலம் இளகும்.
குறிப்பு : எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாது. பெரியவர்களும் அளவாக பயன்படுத்தவும்.