அழகு
உதடுகள் ஒளி பெற இயற்கை வழிமுறைகள்
அழகை வெளிக்காட்டுவதற்கு உதடுக்கு தனியிடம் உண்டு. சிலர் கவிதையை கூட உதட்டில் இருந்து தொடங்குவார்கள். அத்தகைய உதடுகளை ஆரஞ்சு உதடுகள், கோவை பழ உதடுகள் என்று வர்ணிப்பார்கள். இத்தகைய உதட்டை கெடுப்பதில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் உதட்டு தோல் உரிதல்.
இது சிலருக்கு சீதோஷ்ண நிலை மாறும் போதும் சிலருக்கு உதட்டு சாயம் பூசுவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.உதட்டு சாயம் பூசி உதட்டில் புண்கள் ஏற்பட்டால் நாளடைவில் அது புற்று நோய்களை உண்டாக்குகின்றன.
உதட்டுக்கான சிகிச்சை முறைகள்
- தேன் மெழுகு 2 கிராம், சாதிக்காய் 2 எண்ணிக்கை , ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன், பன்னீர் 1 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தேன் மெழுகை உருக்கி ஆலிவ் எண்ணெய் மற்றும் பன்னீருடன் கலந்து சாதிக்காயை தூளாக்கி அதனுடன் சேர்த்து நல்ல கிரீம் போல கலக்கி பாட்டிலில் வைத்துக்கொண்டு உதட்டில் பூசி வர உதடு வரட்சி, உதட்டு வெடிப்பை நீக்கும். மேலும் தொடர்ந்து பயன்படுத்தி வர உதடுகள் மென்மையாகவும் சிகப்பாகவும் மாறும்.
- பாதம் பவுடர், பால், முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை கலந்து உதட்டில் பூசி 10 நிமிடம் கழித்து வெந்நீரில் கழுவிவிட்டு பிறகு சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவவும், இது போல் செய்து வந்தால் உதட்டு வெடிப்பு நீங்கி நல்ல நிறத்தை கொடுக்கும்.
- இரவு தூங்குவதற்கு முன் சோற்று கற்றாழை சாறு எடுத்து உதட்டில் பூசி காலையில் வெந்நீரில் கழுவிவர உடைத்து கருமை நிறம் நீங்கி அழகான சிவப்பு நிறம் கிடைக்கும்.
- நெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவி வர வெடிப்புகள் நீங்கும்.