மிகுந்த மெல்லிய தோல்களையுடைய உதடுகளை நாம் மிகுந்த கவனத்துடன் பராமரிக்க வேண்டும். லிப்ஸ்டிக் அதிகமாக பயன்படுத்திவந்தால் அதன் பக்க விளைவுகள் நம் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.உதடுகளுக்கு நிறமேற்ற சில எளியமுறைகள் உள்ளன அவற்றை பார்ப்போம்.

தேன்

ஒரு தேக்கரண்டி தேனும், எலுமிச்சைச் சாறும் கலந்து உதடுகளில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்யும் போது உதடுகளில் மசாஜ் செய்வது போல் செய்யவும். இப்படி செய்வதால் உதடுகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தேன் உதட்டை பொலிவாக்குவதால் இதனை தொடர்ந்து செய்ய இயற்கையாக உதட்டை அழகு பெற செய்யலாம்.

மாதுளம்பழம்

மாதுளம் பழச்சாற்றை உதடுகளில் தேய்த்து வரலாம் அல்லது அதனுடன் சிறிது பால் சேர்த்து உதடுகளில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ரோஜா இதழ்கள்

ரோஜா இதழ்களை பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அந்த இதழ்களை எடுத்து தேனில் நனைத்து உதடுகளுக்கு மசாஜ் போல் தேய்த்து வர உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உதடுகளுக்கு பூசி வர உதடுகள் ஒளி பெறும்.

சோற்றுக்கற்றாழை

தூங்குவதற்கு முன் கற்றாழை சாறை உதட்டில் தடவி காலையில் கழுவி வர ஒரு வாரத்தில் நல்ல அழகான உதட்டை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =