உடல் நலம்

உடல் பலம் பெற, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க இயற்கை வழிமுறைகள்

பலம் பெற இயற்கை வழிமுறைகள் - உடல் பலம் பெற, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க  இயற்கை வழிமுறைகள்

நோய்களினால் பாதிப்படைந்து உடல் பலவீனம் அடைந்தவர்கள் மீண்டும் உடல் பலத்தை விரைவில் பெற சில இயற்கை வழிமுறைகள் உள்ளது. அவற்றை பின்பற்றி வந்தாலே நாம் இழந்த பலத்தை மீண்டும் பெறலாம். சில பேருக்கு வேலை பளு காரணமாக உடல் சோர்வடைந்து உடல் பலவீனம் அடையும் அவர்களும், சில பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைந்தளவு இருக்கும் அவர்களும் இம்முறைகளை பின்பற்றி நல்ல ஆரோக்கிய உடலை பெறலாம்.

இயற்கை வழிமுறைகள்

  • மக்காச்சோளமாவை அடிக்கடி பயன்படுத்திவந்தால் உடல் பலவீனம் நீங்கி உடலுக்கு நல்ல பலத்தைத்தருகிறது. மேலும் உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை நீக்கி உடலை நல்ல பலத்துடன் இருக்க உதவுகிறது.
  • தூதுவேளை இலையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து கபக்கட்டு நீங்கி உடல் பலம் பெறும். அல்லது தூதுவேளை பூவை பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வர உடல் பலத்தை பெறலாம்.
  • ஆவாரம் பூவை இடித்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலத்தையும் சரும பொலிவையும் தரும்.
  • இஞ்சி 250 கிராம் அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து நான்கு நாட்களுக்கு பிறகு கழித்து தினமும் ஒரு துண்டு வீதம் காலையில் வெறும் வயிற்றில் 45 நாட்களுக்கு சாப்பிட்டு வர உடல் நல்ல ஆரோக்கியத்தை பெறும்.
  • உளுந்தை அரைத்து ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவைக்கொட்டி சர்க்கரை சேர்த்து களியாக கிளறி தினமும் காலையில் ஒருவேளை சாப்பிட்டு வர உடல் உறுதி பெறும். எலும்புகளும் பலம் பெறும்.
  • நீர்முள்ளி விதை 25 கிராம், நெருஞ்சில் விதை 10 கிராம், வெள்ளரி விதை 10 கிராம் எடுத்து இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி அத்துடன் பனகற்கண்டு சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி உடல் பலமடையும்.

Leave a Comment

5 × 3 =

error: Content is protected !!