அழகு

உடல் பருமனை குறைக்க இயற்கை வழிமுறைகள்

பருமன் - உடல் பருமனை குறைக்க இயற்கை வழிமுறைகள்

உடல் பருமன் என்பது உடல் அழகை கெடுப்பதும் மட்டும் அல்ல, உடலில் எண்ணற்ற நோய்களை உண்டாக்குகிறது. எனவே உடல் பருமனை நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் உடலுக்கு பல தீமைகளை உண்டாக்குகிறது. இப்பொழுது பல சிகிச்சை முறைகள் வந்து விட்டாலும் அது பக்க விளைவையும் தருகிறது. அதனால் நாம் இயற்கை உணவு மற்றும் உடற்பயிற்சி முறையில் அனைவராலும் எளிதில் உடற்பருமனை குறைத்துக்கொள்ளலாம்.

நாம் உண்ணும் உணவுகளில் இருந்து பெறப்படும் எரிசக்தியை கலோரி எனப்படும். நம் உடலுக்கு தேவையான அளவை மீறி சாப்பிடும் பொழுது தேவையற்ற கொழுப்பு சேர்ந்து உடல் கூடி உடல் பருமனை உண்டாக்குகிறது.

மேலும் தைராய்டு சுரப்பில் ஏற்படும் கோளாறுகளும், வேறு நோய்களுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும், உடல் உழைப்பின்மையும் உடல் பருமனுக்கு காரணமாகிறது.

இத்தகைய உடல் பருமனை எப்படி இயற்கை முறையில் குறைப்பது என்பதை பார்ப்போம்.

சிகிச்சை முறை

தேவையான மூலிகைகள்
  • கருஞ்சீரகம் – 400 கிராம்
  • உப்பு – 50 கிராம்
  • சுக்கு – 25 கிராம்
  • அரிசித்திப்பிலி – 25 கிராம்
செய்முறை

கருஞ்சீரகத்தை நன்றாக கழுவி நிழலில் உலர்த்திக்கொள்ளவும். சுக்கை மேல் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும். அரிசித்திப்பிலியை இளம் சூட்டில் வறுத்து பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்து இடித்து நன்றாக சலித்து வைத்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை

காலை உணவு சாப்பிட்ட உடன் 30 நிமிடம் கழித்து 1/2 ஸ்பூன் அளவு வெந்நீரில் சாப்பிடவும். இது போல் மூன்று வேளை சாப்பிடவும். தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர உடல் பருமன் குறைந்து அழகான உடலை பெறலாம்.

குறிப்பு : இம்மருந்து சாப்பிடும் பொழுது பேதி ஏற்பட்டால் 2 வேளையாக குறைத்து சாப்பிடவும்.

தினமும் உடற்பயிற்சி

தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இதை ஒரு தினசரி பழக்கமாகவே வைத்துக்கொள்ளலாம்.

Leave a Comment

18 − seventeen =

error: Content is protected !!