நம் உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் கிடைக்காததால் உடலில் சோர்வு ஏற்படுகிறது. சரியான அளவு உணவு உட்கொள்ளாதவர்களுக்கும் உடலில் சோர்வு ஏற்படுகிறது. உடலில் சோர்வு ஏற்படும் போது மனசோர்வும் சிலருக்கு ஏற்படுகிறது.

மனச் சோர்வு ஏற்பட பலகாரணங்கள் உள்ளது. வாழ்வில் ஏமாற்றம், தோல்விகள், எதிர்பாராத நிகழ்வுகள், அதிக வேலை, நீண்ட தூர பயணம் என பல காரணங்கள் உள்ளது. சிலருக்கு நோய்கள் உள்ளதால் மனச்சோர்வு ஏற்படுகிறது.நோய் பாதிப்பு, சத்து இல்லாத உணவு, கைகால் நரம்பு தளர்ச்சி, நாட்பட்ட வியாதிகள் மற்றும் மனவேதனை தரும் நிகழ்வுகள் போன்றவை ஆகும்.

உடல் சோர்வு மனசோர்வுக்கு மூலிகை மருத்துவம்

  • வெட்டிவேரை பானமாக்கி சாப்பிட்டு வர உடல் சோர்வு, மனசோர்வு நீங்கும்.
  • அமுக்கிரா கிழங்கை சூரணத்தை சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி நல்ல உடல் வலிமையை பெறலாம்.
  • 50 கிராம் கடுகை சுத்த நீர் விட்டு அரைத்து 3 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து, பிறகு இறக்கி ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சூடு பொறுக்கும் சூடு வந்ததுடன் இருகால் பாதங்களும் படும்படி 10-15 வைத்திருக்கவும். இது தூக்கமின்மை, மனக்குழப்பம், படபடப்பு, சோர்வு ஆகியவை நீங்கும்.
  • பீட்ரூட் ஜூஸ் உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
  • தலைமுடி தைலங்களில் வெட்டிவேரை சேர்க்கும் போது நல்ல நறுமணம் கிடைக்கும். இதை தலைக்கு தேய்க்கும் போது மனதிற்கு நல்ல அமைதி ஏற்படும்.
  • ஓரிதழ் தாமரை பொடி உடல் சோர்வை போக்கி உடலுக்கு வலிமையை தரும்.

உணவு முறைகள்

கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகள், கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =