மூலிகைகள்
இயற்கையின் புத்துணர்ச்சி பானம் இளநீர்
இயற்கை நமக்கு வழங்கிய புத்துணர்ச்சி பானம் இளநீர், இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
இளநீரால் வாதபித்த மேகு மனதுங்
தெளிவாய்த் துலங்குமிரு திஷ்டிக் – கொளியுங்
குளிர்ச்சியுமுண் டாகுங் கொடியவன னீங்குந்
தளிர்த்தகன நொய்தாகுஞ் சாற்று
பயன்கள்
- இளநீரை முறையாக பருகினால் வாத, பித்த, வெப்பம், தேக பாரிப்பு ஆகியவை நீங்கும். இளநீர் வழுக்கையுடைய புதிய இளநீராக இருக்க வேண்டும், அதுவே பழைய இளநீராக இருப்பின் ஜலதோஷத்தை உண்டாக்குவதுடன் சீதள சம்பந்தமான நோய்களை உண்டாக்கும்.
- இளநீர் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை நீக்குகிறது.
- சாப்பாட்டிற்க்கு பிறகு இளநீரை உண்டால் வாத, பித்த தணிவது மட்டுமின்றி தனி பித்த தோஷம் நீங்கும், இதனால் உடல் நல்ல பொலிவை பெறும்.
- பழங்களுக்கு சமமான கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புகள் அதிகமாகவே உள்ளது.
- இளநீர் உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்ச்சியாக வைக்கிறது.
- இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் மன அழுத்தத்தை நீக்கி நல்ல உறக்கத்தை தரும்.
- கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சூட்டையும் அதனால் ஏற்படும் வயிற்றுக்கோளாரையும் நீக்குகிறது.