உடல் நலம்

இரத்த அழுத்தமும் அதற்கான தீர்வும்

இரத்த அழுத்தத்தில் (இரத்த கொதிப்பு) உயர் இரத்த அழுத்தம் (high blood pressure) குறைந்த இரத்த அழுத்தம் (low blood pressure) என இரு வகைப்படும். அதே போல் இரத்த அழுத்தத்தை இரண்டு அளவுகளில் குறிக்கப்படுகிறது. ஒன்று systolic pressure மற்றும் Diastolic pressure ஆகும்.

உயர் இரத்த அழுத்தத்தை silent killer என்றும் சொல்கின்றன. ஏன் என்றால் எந்த வித நோய் அறிகுறிகளும் இல்லாமல் அமைதியாக ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படைய செய்யும்.

இரத்த அழுத்தமானது வயதுக்கு ஏற்ப மாறுபடாமல் முப்பது வயதுக்குட்பட்டவர்கள் 120/80 இருக்கலாம். 30 வயது முதல் 40 வயது வரை 140/90 இருக்கலாம். இதில் 10 எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். கூடினாலும் குறைந்தாலும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர வேண்டும். இரத்த அழுத்த மாணி என்ற கருவியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
  • உணவில் தேவைக்கு அதிகமான உப்பை சேர்த்துக் கொள்ளுதல்
  • அளவுக்கு அதிகமாக பருத்த உடல் அதனால் அதிகரித்த எடை
  • மது அருந்துவது
  • புகை பிடித்தல்
  • அதிகமான கவலை

உயர் இரத்த அழுத்தத்தினால் இருதயம்- சிறு நீரகங்கள்- மூளை ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இருதயத்தில் ஆர்டரி என்றும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் கோளாறுகளினால் – தசைகள்- சிறுநீரகங்கள்- மூளை இவைகள் தக்க ஆரம்பிக்கின்றன. மூளையை தாக்கும் போது மூலையில் உள்ள இரத்த குழாய் சுருங்குவதால் மயக்க நிலை கை – கால்கள் செயலிழப்பு முதலியவையும் சிறுநீரகக் கோளாறு, பார்வை இழப்பு ஏற்படும். 60 வயதுக்கு மேல் ஸிஸ்ட்டாலிக் பிரஷர் அதிகமானால் இருதயத்தையும் – மூளையையும் பாதிக்கும் அபாயம் உண்டு. திடீரென்று இரத்த அழுத்தம் ஏற்பட்டால் சிறுநீரகப் பாதிப்போ இரத்தநாளங்களின் சுருக்கமோ காரணமாக இருக்குமானால் ஸ்ட்ரோக் வரக்கூடும்.

விளைவுகள்

மாரடைப்பு காரணமாக அகாலமரணம் ஏற்படும், சிறு நீரகங்கள் பாதிப்படையும், கண்களில் உள்ள இரத்த நாளங்களின் வெடிப்பால் இரத்தக் கசிவு ஏற்படும். மூளையில் இரத்த நாளங்கள் வெடித்தல் – மனசோர்வு – உடல் உறுப்புகள் இயக்கம் குறைதல் – நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படும்.

உயர் இரத்தம் அழுத்தம் வராமல் இருக்க வேண்டுமானால். உடல் எடை அதிகமா இருப்பின் உடல் எடையை குறைக்க வேண்டும். உப்பு குறைவாக பயன் படுத்த வேண்டும். நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலைகள் செய்வது, யோக போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.

இளநீர், மோர், வாழைப்பழம் ஆரஞ்சுபழம், தக்காளி, கீரை வகைகள், முட்டை சாப்பிடலாம். மீன் தவிர மற்ற அசைவ உணவுகள் தவிர்த்தல் வேண்டும் முட்டைகோஸ், வெண்டைக்காய், அவரைக்காய், பீன்ஸ், வாழைத்தண்டு சேர்த்து கொள்ளலாம். எண்ணெய் உணவுகள் தவிர்க்க வேண்டும்.

 

வைத்தியம்

 

தினசரி செம்பரத்தம் பூவை தண்ணீரில் அலசி விட்டு மென்று சாப்பிடலாம். அல்லது அரைத்து பானமாக அருந்தலாம். இதனால் இருதயம் பலப்படும், இரத்தம் சுத்தமாகும்.

திராட்சை பழத்தை பன்னீரில் ஊறவைத்து பிறகு பிசைந்து வடிகட்டி சாப்பிட்டு வர இருதய படபடப்பு நீங்கும், இருதயம் பலப்படும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!