உடல் நலம்

இரத்தம் சுத்தமாக

சுத்தமாக - இரத்தம் சுத்தமாக

நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தமாகவும், இரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை விகிதம் சரியானதாகவும் இருந்தால் தான் உடல் நோயின்றி வாழ முடியும். இதற்கு உணவு முறைகள் மிகவும் அவசியமாகும்.

இரத்தம் சக்திமிகு திரவமாக இருக்க முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, நாவல் பழம், உலர்ந்த திராட்சை, முளைகட்டிய தானியங்கள் ஆகியவை அடிக்கடி நான் உணவில் சேர்க்க வேண்டும்.

இரத்தம் சுத்தமாக சில வழி முறைகள்

  • கடுக்காய்ப்பொடி 5 கிராம், கிராம்பு பொடி 4 கிராம் இரண்டையும் சேர்த்து 100 மிலி நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சிறிதளவு நெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க 2,3 தடவை பேதியாகும். இது போல் வாரம் ஒரு முறை அல்லது அவ்வப்போது செய்து வர இரத்தத்தை தூய்மையாக்கும்.
  • புளிச்சக்கீரையை துவையலாக செய்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
  • இஞ்சியை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தமாக்கும்.
  • இலந்தை பழம் சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  • பூண்டு இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

Leave a Comment

one + six =

error: Content is protected !!