மூலிகைகள்
ஆரஞ்சு பழத்தின் பயன்கள்
ஆரஞ்சுப்பழம் எந்த வயதிலும் எந்த நோய் தாக்கத்திலும் சாப்பிடக்கூடிய ஒரே பழம். ஆரஞ்சுப்பழத்திலும் அதன் தோலிலும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன. ஆரஞ்சு பழச்சாறு உடலுக்கு புத்துணர்வு கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு தருகிறது. அதனாலே நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் ஆரஞ்சுப்பழச்சாறு அதிகமாக எடுத்துக்கொள்கிறோம்.
ஆரஞ்சு மருத்துவ பயன்கள்
- நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் நோய் கிருமிகளையும் அழிக்கிறது. மேலும் நம் உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
- இரவினில் தூக்கம் வராதவர்கள் ஆரஞ்சு பழச்சாறு அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.
- ஆரஞ்சுப்பழச்சாற்றுடன் தேன் கலந்து 48 நாட்களுக்கு தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர மெலிந்த உடல் பலமடையும். நரம்புகளும் பலமடையும்.
- குடல் புண்ணை நீக்கும், செரிமானசக்தியை அதிகரிக்கும், கழிவுகளை வெளியேற்றி குடலை சுத்தமாக்கும்.
- வெயில் காலங்களில் ஆரஞ்சு பழச்சாறு அருந்தி வந்தால் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
- உடல் சூட்டை தனித்து சிறுநீர் சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கிறது.
- ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து பொடியாக்கி அதனுடன் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகப்பரு மற்றும் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.
- ஆரஞ்சுப்பழத்தோலை பொடிசெய்து அதை டீ உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.