ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறுசெடி, எதிர் அடுக்கில் கூர்நுனிப் பற்களுடன் கூடிய ஈட்டிவடிவ இலைகளையுடையது, பால் உள்ளவை.

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்பு
சேர்ந்த தினவிவைகள் தேசம்விட் – டூர்ந்தொன்றா
யோடுமாம்மான் பச்சரிசிக் குண்மை யினத்துடனே
கூடுமம்மா னொத்தகண்ணாய் கூறு.

குணம்

வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும் வெப்புத்தனிப்பானாகவும் சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயற்படும்.

மருத்துவ பயன்கள்

இலைகளை சமைத்து உண்ண வறட்சி அகலும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு ரணம் குணமாகும்.

தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத் தாது, உடல் பலப்படும்.

கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம் இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது ஈழப்பி தீரும்.

பூவுடன் 30 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய்ப்பால் பெருகும்.

அம்மான் பச்சரிசி செடியின் இலையை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து, மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நீங்கும்.

பாலைத் தடவி வர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.

இலையை நெல்லிக்காயளவு நன்கு அரைத்து பசும்பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுக்கச் சிறுநீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 5 =