மூலிகைகள்

தேகத்தை அழகுபெறச்செய்யும் அன்னாசிப்பழம்

.jpg - தேகத்தை அழகுபெறச்செய்யும் அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் வருடத்திற்கு ஒரு முறை அதற்கு ஏற்ற காலங்களில் மிகுதியாக கிடைக்கும். இதனை நாம் வீட்டு தோட்டங்களிலும் பயிரிடலாம். சொரசொரப்பான தோல்களையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறமுடைய சதைப்பகுதியும் கொண்டது. இதற்கு பூந்தாழம் பழம், செந்தாழை போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

மேகவெட்டை வாந்திபித்த மீறாவா மேனியிடுந்
தாகமுமட் டாகுந் தலைவலிபோம் – பாகமுறு
பூந்தாழை யின் பழத்தைப் பூரிப்புடன் புசிக்க
லாந்தாழ்வு மில்லை யறி

குணம்

அன்னாசிப்பழத்தால் வெட்டை, பித்தம், தாகம், சிரஸ்தாபரோகம் ஆகிய நோய்களை குணப்படுத்தும்.

பயன்கள்

  • இதன் இலையில் இருந்து எடுத்த சாற்றை சர்க்கரையுடன் கலந்து கொடுக்க தொடர் விக்கல் குணமாகும்.
  • அன்னாசிப்பழத்தை மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கி இடித்து சாறு பிழிந்து அதற்கு சமனெடை சர்க்கரை சேர்த்து சர்பத்தாக காய்ச்சி வைத்துக்கொள்ளவும். இதனை 50 கிராம் அளவு தினமும் இருவேளை சாப்பிட்டு வர பிரமேகம், வெள்ளை, வாந்தி முதலியவை நீங்கும். மேலும் தேகத்தை அழகுபெறச்செய்யும்.
  • அன்னாசிபழத்துடன் தேன் சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஒற்றை தலைவலி, ஞாபக சக்தி குறைவு, மூளை கோளாறு ஆகியவை தீரும்.
  • இது கருச்சிதைவை ஏற்படுத்தும். எனவே கருத்தரித்த ஆரம்ப நாட்களில் இதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Leave a Comment

3 × one =

error: Content is protected !!