மூலிகைகள்

இதயத்தை பலம் பெற செய்யும் அத்திப்பழம்

.jpg - இதயத்தை பலம் பெற செய்யும் அத்திப்பழம்

அத்திப்பழம் மிகுந்த மருத்துவ குணமுடையது. இது எல்லாக்காலங்களிலும் கிடைக்காது. ஆனால் உலர்ந்த அத்திப்பழம் எல்லா நாட்களிலும் கிடைக்க கூடியது. இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் சி ஆகிய சத்துக்களை உள்ளடக்கியது.

தினமுமலக் கட்டொழிக்குந் தேகவெப்ப நீக்கும்
வனமுறுபித் தக்கோப மாற்று – மினுமாயிலுந்
துன்னு விழியையிடைச் சொன்னமே வையகத்தோர்
பன் னுவிதை யத்திப்பழம்

குணம்

அத்திப்பழமானது மலபந்தத்தையும், சரீர உஷ்ணத்தையும், பித்தவேகத்தையும் போக்கும் என்க .

பயன்கள்

  • அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர மலபந்தத்தையும், பித்தத்தையும் நீக்கும்.
  • உலர்ந்த அத்திப்பழத்தை இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உண்டாகும்.
  • அத்திப்பழம் பாலுணர்வு மற்றும் கருவுறும் திறனை அதிகரிக்கிறது.
  • உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகையை நீக்கும். எலும்புகளை வலுவடைய செய்யும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். என்றும் இளமையாக இருக்க உதவுகிறது.

Leave a Comment

3 × three =

error: Content is protected !!