கருப்பை மற்றும் ஆண்மை குறைவை குணமாக்கும் அதிமதுரம்
அதிமதுரம் இனிப்பு சுவையுடையது. இது 1.5 மீட்டர் வரை வளரும் மூலிகை செடி. இதன் வேர், தண்டு, கிழங்கு மருத்துவபயனுடையது.
கத்தியரி முப்பிணியால் வருபுண் தாகங்
கண்ணேயுன் மாதம்விக்கல் வலிவெண் குட்டம்
பித்தமெலும் புருக்கிச் சரமா வர்த்த
பித்தமத மூர்ச்சைவிட பாகம் வெப்பந்தத்திவரு வாதசோ ணிதங்கா மாலை
சருவவிடங் காமியநோய் தாது நட்டங்
குத்திரும லாசியங்க மிதழ்நோ யிந்து
குயப்பு ணும்போ மதூக மெனக் கூறுங் காலே
மருத்துவ பயன்கள்
அதிமதுரம் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வர ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும் ஆரோக்கியமும் கூடும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.
அதிமதுரம் கடுக்காய் மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து சூரணம் செய்து 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டால் அதிக சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
அதிமதுரப் பொடியை 1 அல்லது 2 கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டைஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல், மூலம், தொண்டை கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.
அதிமதுர பொடி, சந்தனத்தூள் சமன் கலந்து 1 கிராம் பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி நிற்கும். அக உறுப்புகளில்புண் ஆறும்.
இதனை முலைப்பாலில் உரைத்துத் கண்களுக்கு தீட்ட ஒளியுண்டாகும். அதிக அளவாகக் கொடுத்தல் மலம் இளகலாகப்போகும்.