மூலிகைகள்

பெண்களின் கருப்பை பிரச்சனைகளை நீக்கும் அசோகு

மருத்துவ பயன்கள் - பெண்களின் கருப்பை பிரச்சனைகளை நீக்கும் அசோகு

முனை கூர்மையாகவும் விளிம்பு நெளி நெளியாகவும் நீண்ட இலைகளை செங்குத்தாக நெடிதுயர்ந்து வளரும் மரம். அழகு தரும் மரமாக வீட்டு தோட்டங்களில் வளர்ப்பதுண்டு. தமிழ் நாட்டில் எல்லாஇடங்களிலும் வளர்க்கப்படுகிறது. பட்டை பூ ஆகியவை மருத்துவ பயனுடையது.

குணம்

நரம்பு, சதை வீக்கங்களை குணப்படுத்தும். கருப்பை பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கும்.

பாரிலசோ கப்பட்டை பாலதனிற் கூட்டி நீ
கோரிக் குடி நீராய்க் கொண்டக்கால் – நேரிழை
வாதப் பெரும்பாடு வன்சீத பேதியுடன்
காத வழியோடுங் காண்

பயன்கள்

  • அசோகு மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாக சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 1 நாள் ஊற வைத்து வடிகட்டி 30மிலி அளவாக 3,4 வேளை தினமும் சாப்பிட்டு வர 1 வாரத்தில் எவ்வளவு நாளான பெரும்பாடும் தீரும். கரம் புளி சேர்க்காமல் உணவை சாப்பிடவும்.
  • அசோகு பூ, மாம்பருப்பு சமமாக பொடி செய்து 3 சிட்டிகை பாலில் கலந்து சாப்பிட சீதபேதி, இரத்த பேதி தீரும்.
  • அசோக்குப் பட்டை , மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழம் ஓடு சமனளவு எடுத்து போடி செய்து 3 சிட்டிகை காலை, மாலை என் இருவேளை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர கருச்சிதைவு, வயிற்று வலி, கர்ப்ப சூலை, வாயுத்தொல்லை நீங்கும். இதனை 2 மண்டலம் ( 96 நாட்கள் ) சாப்பிட்டு வர பெண்களுக்கு கருப்பை பிரச்னை தீர்ந்து கரு தரிக்கும்.
  • அசோக மரப் பட்டையை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடிநீராக்கிக் குடிப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் உடல் நோய்கள் மற்றும் மன நோய்களை குணமாக்குகிறது.

Leave a Comment

five × 4 =

error: Content is protected !!